Rajas murder case is investigated by Rana Takupati and Balthaludevan
ராணா டகுபதி தனது அடுத்த படத்தில் சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தாண்டு நடிகர் ராணாவுக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. அவர் நடிப்பில் வெளியான ’காசி அட்டாக்’ வெற்றியடைந்தது மட்டுமின்றி, ’பாகுபலி 2’ படம் செம்ம ஹிட்டு. இதனால் தெலுங்கு, தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலிருந்தும் ராணாவுக்கு வாய்ப்புகள் குவிகின்றன.
இந்த நிலையில் 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை குறித்த படம் ஒன்று பாலிவுட்டில் தயாராக உள்ளது.
இந்த படத்தில் வழக்கை விசாரணை செய்யும் சிபிஐ அதிகாரி வேடத்தில் நடிக்க ராணாவுக்கு வாய்ப்பு வந்துள்ளது.
ராஜிவ் காந்தி படுகொலை வழக்கை சிபிஐ அதிகாரியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான கார்த்திகேயன் என்பவர் விசாரணை செய்தார். எனவே அவர் கதாபாத்திரத்தில் நடிக்க ராணா நடிப்பது பொறுத்தமாக இருக்கும் என படக்குழுவினர் நினைக்கின்றனராம்.
இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் எனவும், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளது.
