பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ராஜா ராணி' சீரியல் பலருக்கும் ஃபேவரட் சீரியல் என்றே சொல்லலாம்.  இந்த சீரியலில் கார்த்திக் என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும், நாயகனின் தங்கையாக நடித்தவர் நடிகை வைஷாலி.

பின் ஒரு சில காரணங்களால், இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ளார். 

மேலும் 'அஞ்சலி' என்ற தொடரிலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இவர் பல ஆண்டுகளாக சத்யதேவ் என்பவரை காதலித்து வந்த நிலையில், இவர்களுக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்து வைஷாலிக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.