பாகுபலி திரைப்படத்தின் மூலம், உலக அளவில் அனைவரையும் திரையுலகினர் அனைவரையும் தென்னிந்திய சினிமாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமௌலி. இந்த படத்திற்கு முன் இவர் எடுத்த 'ஈ', 'மகதீரா' போன்ற படங்களும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காதவை.

இருப்பினும், இவரின் பாகுபலி படத்தின் சாதனையை யாராலும் முடியடிக்க முடியாத அளவிற்கு செய்துவிட்டார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது பல வரலாற்று கதைகளை மையப்படுத்திய படங்கள் தயாராகி வருகிறது. 

இந்நிலையில் பாகுபலி படப்பிடிப்பின் போது உதவி இயக்குனராக பணியாற்றியவர்களில் அவரது மகன் கார்த்திகேயாவும் ஒருவர். தற்போது தானாக படம் இயக்க வேண்டும் என சிறந்த கதையையும் தயார் செய்து வருகிறார் என கூறப்படுகிறது.

திருமண வயதாகும் இவருக்கு, கடந்த சில மாதங்களாக அவரது குடும்பத்தினர் தீவிரமாக பெண் பார்த்து வந்த நிலையில், தற்போது இவருக்கு ஒரு அழகான பெண்ணை பார்த்துள்ளனர் ராஜமௌலியும், அவருடைய மனைவியும்.

இவர்கள் தன்னுடைய மகனுக்கு இப்போது பார்த்துள்ள பெண்ணின் பெயர் பூஜா. இந்த செய்தி தான் தெலுங்கு திரையுலகில் செம ஹாட் டாப்பிக் என்றே கூறலாம். இந்நிலையில் ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா,வருங்கால மனைவியுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் படி ஒரு புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.