பாகுபலியின் கார்ட்டூன் கதாபாத்திரம் தோனி சாயலில் இருப்பது பற்றி இயக்குனர் ராஜமவுலி விளக்கம் அளித்திருக்கிறார்.

ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் பீஸ் திரைப்படம் தான் பாகுபலி. கடந்த 2015-ம் ஆண்டு திரைக்கு வந்த அப்படத்தின் முதல் பாகத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடித்திருந்த இப்படத்தில் ராணா டகுபதி வில்லனாக மிரட்டி இருந்தார். இதுதவிர ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆகி மாஸ் ஹிட் அடித்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாகுபலி முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வெளியிட்ட ராஜமவுலி, அப்படத்தின் மூலம் மற்றுமொரு பிரம்மாண்ட வெற்றியை ருசித்தார். குறிப்பாக பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.2000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. இன்று பான் இந்தியா படங்கள் அதிகளவில் உருவாவதற்கு பாகுபலி படம் தான் பிள்ளையார் சுழி போட்டது. 

இதையும் படியுங்கள்... Top 5 serial : டிஆர்பி-யில் டாப் கியரில் செல்லும் கார்த்திகை தீபம்... இந்த வாரத்தின் டாப் 5 சீரியல் லிஸ்ட் இதோ

இந்த நிலையில், தற்போது பாகுபலி கிரவுன் ஆஃப் பிளட் என்கிற அனிமேஷன் வெப் தொடர் உருவாகி இருக்கிறது. இந்த வெப் தொடர் வருகிற மே 17-ந் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த வெப் தொடரை ஜீவன் இயக்கி இருக்கிறார். முழுக்க முழுக்க அனிமேஷன் வெப் தொடராக உருவாகி உள்ள இந்த தொடருக்கான புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் இயக்குனர் ராஜமவுலி கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் ராஜமவுலி. அதன்படி கார்ட்டூன் பாகுபலி ஏன் தோனி சாயலில் இருக்கிறார் என்கிற கேள்வி ராஜமவுலியிடம் கேட்கப்பட்டது. இதற்கு, பதிலளித்த ராஜமவுலி, ‘இதை உருவாக்கியவர்களும் என்னைப் போலவே தோனி ரசிகராக இருக்கலாம்’ சிரித்தபடியே கூறிவிட்டுச் சென்றார்.

இதையும் படியுங்கள்... Prabhas Join Kannappa: அக்‌ஷய் குமாரை தொடர்ந்து ‘கண்ணப்பா’ படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்!