விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'ராஜா ராணி' சீரியலுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த சீரியலில் செம்பாவாக நடித்து வரும் ஆலியாவிற்கு தான் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்தல், இந்த சீரியலில் சஞ்சீவுக்கு தங்கையாக நடித்து வரும், ரித்திகாவின் ரசிகர் ஒருவர், இவரை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என அவருடைய வீட்டிற்கே வந்து, பிரச்சனை செய்துள்ளார்.

நடிகை ரித்திகா, தன்னுடைய குடும்பத்துடன் வடபழனி, மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். 

இவர் இங்கு வாசிப்பதை தெரிந்து கொண்டு, வேலை விஷயமாக சென்னை வந்த கோபிச்செட்டி பாளையத்தை சேர்ந்த என்ஜினீயர் வேலை செய்யும் பரத் என்னும் இளைஞர் ஒருவர், நேரடியாக ரித்திகாவின் வீட்டிற்கு சென்று காரின் பெல்லை அழுத்தியுள்ளார். அப்போது வெளியே வந்த நடிகையின் தந்தையிடம் ரித்திகாவை காதலிப்பதாக கூறி திருமணம் செய்து வைக்குமாறு அடம்பிடித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய தந்தை, வீட்டை விட்டு வெளியேற்ற முயன்றார். ஆனால் அவர் ரித்திகாவை தான் திருமணம் செய்வேன் என பிரச்சனை செய்தார். பின்னர் குடியிருப்பு காவலாளி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து, வடபழனியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

போலீசார் விசாரணை செய்ததில், ரித்திகா சீரியலில் வருவதை பார்த்து காதலிக்க தொடங்கியுள்ளார் பரத். என தெரியவந்துள்ளது.