குழந்தை பெற்றதும் ஓவர் ஸ்லிம்மாக மாறிய ஆல்யா மானசா! எடுப்பா போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் செம்பா!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “ராஜா ராணி” என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா அனைவரது மனைதையும் ஈசியாக கொள்ளையடித்தார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “ராஜா ராணி” என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா அனைவரது மனைதையும் ஈசியாக கொள்ளையடித்தார். "குளிர் 100" படத்தில் ஹீரோவாக நடித்தவர் சஞ்சீவ். இவர் தான் "ராஜா, ராணி" தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார். இந்த தொடரில் நடிக்கும் போது காதல் வயப்பட்ட ஆல்யா மானசா , சஞ்சீவ் ஜோடி கடந்த வருடம் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்.
இளசுகளை கவர்ந்த இந்த ஜோடி மீண்டும் வேறு ஏதாவது சீரியலில் ஒன்றாக இணைவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் என்றே கூறலாம்.
ஆல்யா மானசா திடீர் என தான் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்தார். எனவே சஞ்சீவ் மட்டுமே தற்போது, மற்றொரு புதிய சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆல்யா விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்தார்.
மேலும் செய்திகள்: சொன்ன கருத்தில் மாற்றமில்லை... ஜோதிகாவிற்கு ஆதரவாக சூர்யா எடுத்த அதிரடி முடிவு...!
இந்நிலையில், ஆல்யா -விற்கு கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்பு அழகிய பெண் குழந்தை பிறந்திருப்பதாக அவரது கணவர் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
குட்டி ஆல்யாவின் முகத்தை பார்க்க வேண்டுமென ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அதனால் தனது உள்ளங்கையில் குழந்தையின் பிஞ்சு கையை வைத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் குழந்தைக்கு ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதி ஐலா சையத் என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின்... இதுவரை பார்த்திராத அழகு புகைப்படங்கள்!
கர்ப்பமாக இருந்த போது, மிகவும் குண்டாக இருந்த ஆல்யா, தற்போது அவரா... இவர் என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு உடல் எடையை குறைத்து, செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
மேலும் ஃபுல் மேக் அப்பில், டாப் ஆங்கிளில் போஸ் பிங்க் நிற உடையில் மிகவும் எடுப்பாக கொடுத்துள்ள இவருடைய போஸை பார்த்து, ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: பிரபாகரன் பெயர் சர்ச்சை: வன்மையாக கண்டித்து.. திருமாவளவன் சொன்ன அதிரடி தீர்வு!
ஸ்லிம் ஃபிட் நாயகியாக மீண்டும் கலக்கும் ஆல்யாவின் புகைப்படங்கள் இதோ..