நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்துக் கொண்டிருக்கும், 'வர்மா' படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் பாலா. 

இந்தபடத்தில் கதாநாயகியாக பெங்காலியை சேர்ந்த ஸ்ரேயா ஷர்மா நடிக்கிறார் என சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வெளியானாலும் இதுவரை படக்குழுவினர் இது குறித்து எந்த தகவலையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான நடிகை ரைசா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னும் இந்த தகவலை படக்குழுவினரோ அல்லது, நடிகை ரைசாவோ உறுதி செய்யவில்லை. 

தற்போது ரைசா, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 'பியார் ப்ரேமம் காதல்' என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.