Asianet News TamilAsianet News Tamil

யார் அவன்..? 7 படத்தில் மிரட்டும் ரஹ்மான்..!

ரஹ்மான் மற்றும் பிரித்விராஜ் இணைந்து நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் மலையாள  படம் 'ரணம்' . நிர்மல் சஹாதேவ் படத்தை இயக்கி உள்ளார் . இதன் படப்பிடிப்பு முழுதும் அமெரிக்காவில் நடை பெற்றது. வரும் செப்டம்பர் 6-ம் தேதி படம் திரைக்கு வருகிறது . ஏற்கனவே ரஹ்மான் தமிழ் வசனம்  பேசி வெளிவந்த இந்த படத்தின் டீஸர் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பும் ஏற்ப்படுத்தியது .

rahuman acting 7 thriller movie
Author
Chennai, First Published Aug 30, 2018, 2:18 PM IST

ரஹ்மான் மற்றும் பிரித்விராஜ் இணைந்து நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் மலையாள  படம் 'ரணம்' . நிர்மல் சஹாதேவ் படத்தை இயக்கி உள்ளார் . இதன் படப்பிடிப்பு முழுதும் அமெரிக்காவில் நடை பெற்றது. வரும் செப்டம்பர் 6-ம் தேதி படம் திரைக்கு வருகிறது . ஏற்கனவே ரஹ்மான் தமிழ் வசனம்  பேசி வெளிவந்த இந்த படத்தின் டீஸர் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பும் ஏற்ப்படுத்தியது .ரஹ்மான் இந்த படத்தில் தாமோதர் என்ற தமிழ் கதாபாத்திரமாக தோன்றுகிறார். 

இஷா தல்வார் கதாநாயகியாக நடிக்கிறார் . நேற்று  'ரணம்' படத்தின்   ட்ரைலர் சூப்பர் ஸ்டார் மோகன் லால் வெளியிட்டார் . ட்ரைலர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே ரசிகர்களை ஈர்த்து  லட்சம் பார்வையாளர்களை தொட்டுள்ளது . எனவே இந்த படம் மலையாள சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்ப்படுத்தியுள்ளது .ரஹ்மானுக்கு 'ரணம்'.பெரிய திருப்பு முனையாக அமையும் என்றே மலையாள திரை உலகினரின் கணிப்பு .

தமிழ் தெலுங்கு மொழி  படங்களிலும்  பரபரப்பாக நடித்து வரும்  ரஹ்மான் தற்போது நிசார் ஷாபி இயக்கும் தமிழ் - தெலுங்கு இரு மொழி படமான '7(செவன்)' னில் கதாநாயகனாக நடித்து வருகிறார் .  

இந்த படத்தின் டீஸரும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .மேலும் தெலுங்கில் 'காசி ' (GHAAZI)  புகழ் சங்கல்ப் ரெட்டி இயக்கத்தில் வருண் தேஜ் ,அதிதி ராவ் ஜோடி சேரும்   'அந்த ரக்ஷா' 9000 km per hour'   என்ற பிரம்மாண்ட படத்தில்   இந்தியாவின் முக்கிய விஞ்ஞானி  கதாபாத்திரமாக நடிக்கிறார் .இந்த படம் தெலுங்கில் மிகவும் எதிர் பார்க்கப்படும் முக்கிய படமாகும் .தற்போது தென்னிந்தியாவிலுள்ள இளம் இயக்குனரர்களின் விருப்ப நடிகராக பிசியாகி விட்டார் ரஹ்மான்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios