பெண்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பல அரசியல் சட்டங்கள், சமூக தொண்டு நிறுவனங்கள் என பல இருந்தாலும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகள் இன்று வரை குறைந்த வழி இல்லை .

அதுவும் தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 3 பெண் குழந்தைகள் சில மிருகங்களால் கசக்கி தூக்கி எறியப்பட்டனர்.

இந்நிலையில் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வரும் ராகுல் பிரீத்சிங் , நடிகை பாவனாவுக்கு நடந்தது போல் தனக்கு நேர்ந்திருந்தால், தன்னிடம் யாராவது தவறாக நடந்திருந்தால் அவர்களை கொலை செய்திருப்பேன் என்று கூறியுள்ளார்.

அதோடு நான் வெளியே கிளம்பினால் பார்த்துப் போ என்று அம்மா சொல்வார்கள். காரில் டிரைவர் இருக்கிறார் பிறகு என்ன என்று நினைப்பேன். பாவனா சம்பவத்திற்கு பிறகு யாரை நம்புவது, நம்பக் கூடாது என்று தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.