நடிகர் ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி ஷங்கர் முதல் முறையாக இணைந்து நடிக்கும், ருத்ரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது. 

நடிகர் ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி ஷங்கர் முதல் முறையாக இணைந்து நடிக்கும், ருத்ரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'ஜிகர்தண்டா' போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன், நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸை, வைத்து 'ருத்ரன்' படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இந்த படத்தில் முதல் முறையாக நடிகை பிரியா பவானி ஷங்கர் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடிக்க நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை, K.P.திருமாறன் கதை, திரைக்கதை எழுத கதிரேசன் இயக்குகிறார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். மேலும் இந்த படத்தில், நாசர், பூர்ணிமா ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். மேலும் ராகவா லாரன்சுடன் ஏற்கனவே இணைந்து நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ள, நடிகர் சரத்குமாரும் இப்படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தற்போது கொரோனா தமிழகத்தில் சற்று கட்டுக்குள் வந்துவிட்டதால், அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஆகஸ்ட் 23 ஆம் தேதியில் இருந்து தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயக்க அரசு அனுமதி அளித்தது. எனினும் தற்போது தமிழகத்தில் 20 சதவீத திரையரங்குகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ள திரையரங்குகள் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அடுத்தடுத்து திரைப்படங்களை திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் ருத்ரன் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு 'ருத்ரன்' திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழுவினர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்.