தமிழ் சினிமாவில், உள்ள பிரபலங்களிலேயே மிகவும் அதிக தொகையான 3 கோடி நிதி உதவியை மக்களுக்காக அறிவித்தவர், பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ். 

அஜித் 1 . 25 கோடி வழங்கிய நிலையில், அவரை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ், பிரதமரின் நிதிக்கு,முதலமைச்சரின் நிதிக்கு, மாற்று திறனாளிகளுக்கு, பெப்சி தொழிலாளர்களுக்கு, தின கூலி ஊழியர்களுக்கு, நடன இயக்குனர்கள் சங்கத்திற்கு என மொத்தம் 3 கோடி நிதியை அறிவித்தார்.

இதுவரை தமிழ் திரையுலகை சேர்ந்த யாரும் கொடுத்திடாத பெரிய, தொகையை லாரன்ஸ் கொடுத்து உதவியது பலருடைய பாராட்டுகளையும் இவருக்கு பெற்று தந்தது. இதை தொடர்ந்து மூன்று கோடியை அடுத்து மீண்டும் உதவி செய்ய உள்ளதாகவும் இன்று மாலை அந்த உதவி பற்றி அறிவிக்க உள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது...  " மக்களுக்கு கொடுத்த நிதிக்காக அனைவரும் தன்னை மனதார பாராட்டியதாகவும் அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்... என தெரிவித்துள்ளார்.

மேலும் சிலரிடம் இருந்து உதவி கேட்டு தனக்கு போன் மூலம் கோரிக்கை வந்ததாகவும் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் தன்னால் அழைப்புகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்பதால் தன் உதவியாளர்களிடம் தான் பிசியாக இருப்பதாக சொல்ல சொல்லியதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

பின்னர் தன்னுடைய அறைக்கு சென்று யோசித்த போது...  பொதுமக்கள் பசியால் அழுது கொண்டிருப்பதை கேள்விப்பட்டு எனக்கு தூக்கமே வரவில்லை. பலர் உணவாரா உதவியாக இருந்த கோவில்கள் கூட தற்போது மூடப்பட்டு விட்டது. பசியுடன் இருப்பவர்களுக்கு உதவுவது கடவுளுக்கு சேவை செய்வதற்கு சமம். 

மேலும் உதவிகள் செய்வதற்காக  தன்னுடைய ஆடிட்டருடன் ஆலோசனை செய்து வருவதாகவும் , இன்று மாலை 5 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக அவர் கூறியுள்ளார். குறிப்பாக " இந்த பூமியில் நாம் பிறக்கும்போது எதையும் கொண்டு வரவில்லை" என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதனால் இன்று மேலும், சில உதவிகளை ராகவா லாரன்ஸ் அறிவிக்க உள்ளது தெரிகிறது.