Asianet News TamilAsianet News Tamil

கொரோனா பாதித்த நிறைமாத கர்ப்பிணிக்கு உதவிய ராகவா லாரன்ஸ்... அடுத்த கணமே களத்தில் இறங்கிய அமைச்சர்...!

தற்போது கொரோனா தொற்று உறுதியான கர்ப்பிணி பெண்ணிற்கு செய்துள்ள அசத்தல் உதவி பாராட்டுக்களை குவித்து வருகிறது. 

Raghava Lawrence Help Corona positive Pregnant Lady
Author
Chennai, First Published May 2, 2020, 4:02 PM IST

நாடு தற்போது உள்ள சூழ்நிலையில் பலரும் தங்களால் முடிந்த பல உதவிகளை வாரி வழங்கி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் எடுத்ததுமே 3 கோடி நிதி உதவியை அளித்தார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், ஏழை மக்களுக்காக ரூ.75 லட்சம் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

Raghava Lawrence Help Corona positive Pregnant Lady

தனது சம்பளத்தில் இருந்து ரூ.25 லட்சத்தை தூய்மை பணியாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த உள்ளதாக அறிவித்தார்.  இதை தொடந்து, சென்னை - செங்கல்பட்டு விநோயோகஸ்தர் சங்கத்திற்கு ரூபாய்.15 லட்சம் நிதி உதவி வழங்கினார். நலித்த நடிகர்கள் மற்றும் நாடக கலைஞர்களுக்கு உதவும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவி செய்தார். மீண்டும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்த  ராகவா லாரன்ஸ், அதனை சென்னை வளசரவாக்கம், கோடம்பாக்கம், வடபழனி பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிப்பதற்காக நிதி உதவி செய்தார். 

Raghava Lawrence Help Corona positive Pregnant Lady

இதையும் படிங்க:  கண்ணீர் விட்டு கதறிய நயன்தாரா... இயக்குநர் காலில் விழுந்து அழுத வைரல் வீடியோ...!

இதேபோல் கொரோனா ஊரடங்கால் அவதியுறும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக முதற்கட்டமாக 50 பேரின் வங்கி கணக்கில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் பணம் செலுத்தியுள்ளார். இப்படி அடுத்தடுத்த உதவிகளால் திணறடித்த ராகவா லாரன்ஸ், தற்போது கொரோனா தொற்று உறுதியான கர்ப்பிணி பெண்ணிற்கு செய்துள்ள அசத்தல் உதவி பாராட்டுக்களை குவித்து வருகிறது. 

Raghava Lawrence Help Corona positive Pregnant Lady

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள தகவலில், வணக்கம் நண்பர்கள், ரசிகர்கள். நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். “இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவம் நெருங்கும் தருவாயில் இருந்தார். அவரது கணவர் மற்றும் மாமனார் என்னை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர்”.

“நான் உடனே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி சாரிடம் கூறினேன். அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை கீழ்ப்பாக்கம் கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தார். அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதும், மருத்துவர்கள் உடனடியாக அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். பிரசவத்தில் அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். அந்த பெண்ணிற்கு கொரோனா தொற்றிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது”. 

இதையும் படிங்க: அஜித்தையும் விட்டு வைக்காத மீரா மிதுன்... தீயாய் பரவும் இந்த போட்டோவை நீங்க பார்த்திருக்கமாட்டீங்க....!

“மாண்புமிகு முதலமைச்சர், அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் ரவி, மருத்துவர்களுக்கு நன்றி.... நீங்கள் அனைவரும் கடவுளுக்கு இணையானவர்கள்” என்று புகழ்ந்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios