பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். கையில் இருந்த படங்கள் அனைத்தும் போனதால் வெறுப்பின் உச்சத்திற்கு போன மீரா மிதுன், எப்படியாவது ஹீரோயின் அவதாரம் எடுத்தே தீருவேன் என்று விடப்பிடியாக இருக்கிறார். 

அதற்காக கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி காட்டி ஹாட் போட்டோஸை தனது சோசியல் மீடியா பக்கங்களில் உலவவிட்டு வருகிறார். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். மீரா மிதுன் ஷேர் செய்யும் ஓப்பன் போட்டோஸை பார்க்கும் நெட்டிசன்கள் 'மூட வேண்டியதை மூடுங்க' என கண்டபடி திட்டினாலும் அதை காதில் வாங்குவதே இல்லை. மீரா மிதுனின் ஓவர் கிளாமர் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியும் விடுகிறது. இதனால் என்னதான் நெட்டிசன்கள் தன்னை கழுவி, கழுவி ஊற்றினாலும் கவர்ச்சி போட்டோ போடுவதை மீரா கைவிடுவதே இல்லை. 

தற்போது லாக்டவுன் ஆரம்பித்த காலத்தில் இருந்து மீரா மிதுன் போடும் அட்ராசிட்டிகள் எல்லை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. கொஞ்ச நாட்களாக திரைப்பிரபலங்களான வெங்கட் பிரபு, விஷால், அனிருத் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதையும் நெட்டிசன்கள் செமையாக கலாய்த்து வந்தனர். 

நேற்று தல அஜித்தின் 49வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பலரும் அஜித்தின் நல்ல குணங்களை நினைவு கூர்ந்து சோசியல் மீடியாவில் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்தனர். பிரபலங்கள் உட்பட பலரும் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வாழ்த்து மழை பொழிந்தனர். 

iஇதையும் படிங்க: கண்ணீர் விட்டு கதறிய நயன்தாரா... இயக்குநர் காலில் விழுந்து அழுத வைரல் வீடியோ...!

அப்படி மீரா மிதுன் அஜித்துடன் "என்னை அறிந்தால்" படத்தில் நடித்துள்ள போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வாழ்த்து கூறியுள்ளார். த்ரிஷா நடத்தும் நடன  பள்ளிக்கு அவரை பார்க்க அஜித் செல்வார் அந்த காட்சியில் தான் மீரா மிதுன் நடித்துள்ளார். அத்துடன் தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த சீன் திரையில் வரவில்லை என்பதையும் நினைவு கூர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தாறுமாறு வைரலாகி வருகிறது.