மலையாளத்தில் 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் மணிசித்ரத்தாலு. மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரான ஃபாசில் இயக்கத்தில் மோகன் லால், ஷோபானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குநர் பி.வாசு ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்தார். மலையாளம் மற்றும் கன்னடத்தில் சக்கப்போடு போட்ட அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டார் பி.வாசு.

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005ம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளியானது. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சூப்பர் ஸ்டாரின் அசத்தலான ஸ்டைல், ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பு இரண்டும் சேர்ந்து படத்தை கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஓடவைத்தது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. 

பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சந்திரமுகி கதை இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒன்று வேட்டையன் ராஜா, மற்றொரு கதாபாத்திரம் ஜோதிகா ஏற்று நடித்த சந்திரமுகி. இந்நிலையில் "ரா ரா" பாடலில் மட்டுமே காட்டப்பட்ட சந்திரமுகி, வேட்டையன் ராஜா கதாபாத்திரங்களை  இரண்டாம் பாகம் முழுவதும் காட்டப்போகிறார்களாம். 

 

இதையும் படிங்க: ராஜமாதா கெட்டப்பில் வனிதா... தீயாய் பரவும் போட்டோவை பார்த்து கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

அதாவது சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் நடிக்க தன்னிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவலை ஜோதிகா மறுத்தார். எனவே இந்த முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளவர் யார்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்த நிலையில், தற்போது இந்த படத்தில், பிரபல பாலிவுட் நடிகை கியார அத்வானி, ஜோதிகா கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகின. இந்த வதந்திக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

இதையும் படிங்க: எனக்கு ஏதாவது நடந்தால் விஜய், சூர்யா தான் பொறுப்பு... ஆபாச மெசெஜ்களால் அலறும் மீரா மிதுன்...!

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், சந்திரமுகி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா, சிம்ரன், கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் ஆகும். தற்போது ஆரம்பகட்ட திரைக்கதை பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. கொரோனா லாக்டவுனுக்கு பிறகே தயாரிப்பு நிறுவனம் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என விளக்கம் கொடுத்துள்ளார்.