தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். குறிப்பாக இந்த கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இதுவரை எந்த முன்னணி நடிகரும் கொடுக்க முன் வராத பெரிய தொகையான 3 கோடி ரூபாயை நிதியாக அறிவித்தார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், ஏழை மக்களுக்காக ரூ.75 லட்சம் என முதற்கட்டமாக 3 கோடி ரூபாயை ஒரே தடவையில் அறிவித்து, தமிழக மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

இதையும் படிங்க: “இந்த இரண்டை மட்டும் செய்தால் போதும்”... குஷ்புவின் ஸ்லிம் லுக் ரகசியம்...!

இதை தொடந்து, சென்னை - செங்கல்பட்டு விநோயோகஸ்தர் சங்கத்திற்கு ரூபாய்.15 லட்சம் நிதி உதவி வழங்கினார். நலித்த நடிகர்கள் மற்றும் நாடக கலைஞர்களுக்கு உதவும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவி செய்தார். மீண்டும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்த  ராகவா லாரன்ஸ், அதனை சென்னை வளசரவாக்கம், கோடம்பாக்கம், வடபழனி பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிப்பதற்காக நிதி உதவி செய்தார். 

இதையும் படிங்க: “டாப் ஆங்கிளில் எல்லாமே தெரியுது”... கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்...!

இவை எல்லாம் போதாது என்று நலிந்த நடன கலைஞர்களுக்காக 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை ஒதுக்கினார். அதை மிகவும் கஷ்டப்படும் 23 நடன கலைஞர்களின் வங்கி கணக்கில் தலா 25 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். இப்படி அடுத்தடுத்து உதவிகளால் திணறடித்து வரும் ராகவா லாரன்ஸ், அடுத்ததாக தான் நடிக்க உள்ள படம் மூலம் கிடைத்த தனது சம்பளத்தில் இருந்து ரூ.25 லட்சத்தை தூய்மை பணியாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த உள்ளதாக அறிவித்திருந்தார். 

இதையும் படிங்க: கேரளா ஸ்டைல் வேட்டி, சட்டையில் அமலா பால்... கெத்து போஸைப் பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

தற்போது ராகவா லாரன்ஸ் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்காக அவர் வாங்கும் சம்பளத்திலிருந்து 25 லட்சம் ரூபாயை தான் ராகவா லாரன்ஸ் தூய்மை பணியாளர்கள் வங்கி கணக்கில் செலுத்த சொல்லியிருந்தார். அதன்படி 3 ஆயிரத்து 385 தூய்மை பணியாளர்களின் வங்கி கணக்குகளில் 25 லட்சத்து 38 ஆயிரத்து 750 ரூபாயை அந்த நிறுவனம் செலுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக ராகவா லாரன்ஸ் உதவிகளை அறிவிக்க மட்டுமே செய்கிறார், அதை முறையாக செய்வாரா என்பதற்கு உறுதி இல்லை என விமர்சனங்கள் எழுந்தன. அதனால் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் பணம் செலுத்தியதற்கான தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய விஷமிகளின் வாயை அடைத்துள்ளார்.