ஒரே ஒரு பேய் படம் எடுத்தால் போதும் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆகிவிடலாம் என்பதை காஞ்சனா படம் மூலம் சாதித்து காட்டியவர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முக திறமை கொண்ட இவர் தெலுங்கில் முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டடித்துள்ளன. ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் எனும் வினோத்தும் அவருடனுன் சேர்ந்து திரைப்படங்களில் நடித்துள்ளார். 

அப்படி தெலுங்கு திரைப்படத்தில் நடித்த போது துணை நடிகை ஒருவருடன் எல்வினுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து தன்னை காதலிக்க சொல்லி எல்வின் அந்த துணை நடிகையை டார்ச்சர் செய்து வந்துள்ளார். அவரது தொடர் தொல்லை பொறுக்க முடியாமல் துணை நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவரது செல்வாக்கை பயன்படுத்தி தன்னை ஜெயிலில் அடைத்ததாக அந்த பெண் பகீர் புகார் ஒன்றை கூறியுள்ளார். 

இதையும் படிங்க: தோழியிடம் அத்துமீறிய அமலா பால்... கண்ட இடத்தில் கைவைத்து சில்மிஷம்... முகம் சுழிக்க வைக்கும் ஆபாச நடனம்...!

மேலும் சிறையில் இருந்த போதே தன்னை எல்வின் கொலை செய்ய முயன்றதாகவும், போலீசாரும் அதற்கு துணையாக செயல்படுவதாகவும் அடுத்தடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். தொடர்ந்து எல்வினால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தெலங்கானா முதலமைச்சர் தனக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டுமென கதறி துடித்துள்ளார். துணை நடிகையின் இந்த பகீர் குற்றச்சாட்டு டோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.