நடிகர், நடன இயக்குனர், என பல அவதாரங்களில் கோலிவுட்டில் ஜொலித்து வரும் ராகவா லாரன்ஸ் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

மேலும் மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்வது, இதய நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவுவது என பல்வேறு உதவிகளை தனது அறக்கட்டளை மூலம் செய்து வருகிறார்.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தன்னுடைய அம்மாவிற்காக கோவில் ஒன்றை கட்டி வந்தார்... இன்னும் சில நாட்களில் அந்த கோவில் வேலைகள் நிறைவு பெற உள்ளது.

 இந்த கோவிலை திறந்து வைக்க வருமாறு சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்து ராகவா லாரன்ஸ் அன்புக்கோரிக்கை வைத்து வைத்துள்ளதாகவும் இதற்கு ரஜினி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. 

நடிகர் ரஜினியும், லாரன்சும் பல விஷயங்களில் ஒருமித்த கருத்தோடு காணப்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .