Asianet News TamilAsianet News Tamil

இது ஸ்டுடன்ஸ்  பண்ற வேலை இல்ல - வேற குரூப் உள்ள புகுந்துட்டாங்க...!!! போட்டு உடைத்தார் ராகவா லாரன்ஸ்....!!!

ragava lawrence-leve-the-jallikattu-protest-speech
Author
First Published Jan 23, 2017, 6:08 PM IST


அலங்கா நல்லூரில் ஜல்லிகட்டுக்கு தடையை நீக்க கோரி முதல் முதலில் போராட்டம் வெடித்தது அதனை தொடர்ந்து சென்னை மெரினா, மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களிலும் இந்த போராட்டம் காட்டு தீ போல் வேகமாக பரவியது.

நூறு பேர் கொண்ட மாணவர்களுடன் ஆரமித்த இந்த அறவழி போராட்டம், ஆயிரம், லட்சம், கோடி என உச்ச கட்ட போராட்டமாக மாற்றி, இந்தியாவையும் தாண்டி பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களுடைய ஆதரவையும் பெற்றது.

ragava lawrence-leve-the-jallikattu-protest-speech

இந்த போராட்டத்தில் ஒன்று சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் எந்த ஒரு கட்சியினரையும், நடிகர்களையும் இந்த போராட்டத்தில் சேர்த்து கொள்ளவில்லை.

ஆனால் மாணவர்களில் உண்மையான போரட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்து ஆதரவு தெருவித்த, நடிகர் ராகவா லாரன்ஸ், ஹிப் ஹாப் ஆதி, ஆர்.ஜெ.பாலாஜி,  ஜி.வி.பிரகாஷ் போன்ற சிலரை மட்டுமே ஏற்றுகொண்டனர்.

ragava lawrence-leve-the-jallikattu-protest-speech

இந்த போராட்டத்தில் உண்மையாக தமிழர்களில் பாரம்பரிய விளையாட்டை மீட்க போராடி வந்த பலருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்த கூடிய மொபைல் டாய்லட், பெட்ஷீட் போன்றவற்றை வழங்கினார்.

மேலும் உடல் நிலை சரி இல்லாமல் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று, மீண்டும் இந்த போரட்ட களத்தில் குதித்து மாணவர்களுடன் போராடினார்.

ragava lawrence-leve-the-jallikattu-protest-speech

இந்த போரட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக ஜல்லிகட்டுக்கு தடையை நீக்கி அவசர சட்டம் பிறப்பித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெருவித்தார். 

தற்போது இந்த முடிவை ஏற்க முடியாது என மாணவர்கள் பலர் குரல் உயர்த்தியுள்ளனர், மேலும் இது கலவரமாக மாறி சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகள் ஸ்தம்பித்துள்ளது.

ragava lawrence-leve-the-jallikattu-protest-speech
 
இது  குறித்து லாரன்ஸ் கூறுகையில் இது ஸ்டுடன்ஸ் செய்யும் வேலைகள் இல்லை என்றும் வேறு ஒரு குரூப் உள்ளே புகுந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய லாரன்ஸ் இந்த முதல் வெற்றியை கொண்டாட வேண்டும் என்றும், தற்போது அனைவரும் இந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லவேண்டும் என கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios