நடிகை ராதிகா வாரிசு நடிகையாக 'கிழக்கே போகும் ரயில்' படம் மூலம் திரையுலகில் அறிமுகம் கொடுத்தவர். தொடர்ந்து 80களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர்.

தற்போது வெள்ளித்திரையில் மட்டும் 400கும் மேல் பட்ட படங்களில் நடித்து தனக்கென சினிமாத்துறையில் ஒரு அங்கீகாரத்தை பதித்துள்ளார், மேலும் சின்ன திரையிலும் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் சிறந்து விளங்குகிறார் .

இவர் இப்போது இயக்குனர் கௌரவ் இயக்கத்தில் பெயரிடாத படம் ஒன்றில், உதயநிதிக்கு அம்மாவாக நடித்து வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக எடுக்க படும் இந்த படத்தில் ராதிகா பஸ் ஓட்டுநராக நடிக்கிறார்.

ஏற்கனவே கார் ஓட்ட தெரிந்த இவரை, இயக்குனர் மேடம் நீக்க சும்மா ஸ்டேரிங் பிடிக்குற மாதிரி நடிச்ச போது ஓட்ட தேவையில்லை என கூறினாராம்.

ஆனால் ராதிகா பஸ் ஓட்டுவதற்கு இரண்டு நாள் பயிற்சி எடுத்து ஷூட்டிங்கிங் பஸ் ஓட்டி அசத்தியுள்ளாராம், இது பற்றி இயக்குனர் ராதிகாவிடம் கேட்டதற்கு எந்த தொழில் செய்தாலும் முழு உணர்வோடு செய்யவேண்டும் , என்றும் அப்போது தான் நிலைக்க முடியும் என்று கூறினாராம்.

இதனை கேள்விப்பட்ட திரையுலகை சேர்ந்த பலர் இந்த வயதிலும் இவரது தொழில் பக்தியை பார்த்து வியர்ந்துள்ளனர். அதே போல பெண்களால் எல்லாம் முடியும் என செய்து காட்டிய ராதிகாவுக்கு வாழ்த்துக்கள்.