வில்லி, ஹீரோயின் என சகலவிதமான கேரக்டர்களிலும் கெத்து காட்டுபவர் வரலட்சுமி சரத்குமார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத குடும்பத்தின் வாரிசான இவர், மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பளீச்சென பேசக்கூடியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி, படவாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டேன் என்று கூறியது பரபரப்பை கிளப்பியது. 

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அடுத்த குண்டை தூக்கிப் போட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேயன் சரத்குமாரை அப்பா என்று அழைத்ததை நெட்டிசன்கள் கிண்டல் செய்திருந்தனர். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த வரு, ரேயனுக்கு ஒரு அப்பாவாக அவர் அனைத்தையும் முறையாக செய்துள்ளார். அவரை ரேயன் அப்பா என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

அந்த பேட்டியின் போது நீங்கள் ஏன் ராதிகாவை ஆன்ட்டி என்று அழைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அவர் எனது அப்பாவுக்கு இரண்டாவது மனைவி அவ்வளவு தான். எனக்கு அம்மா கிடையாது. எல்லாருக்கும் ஒரு அம்மா தான் இருக்க முடியும். என் அம்மா சாயா தான். அவரை ஆன்ட்டி என்று அழைப்பதால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.