பிரபல நடிகை ராதிகாவின் மகள் ரேயானுக்கு ஏற்கனவே தாரக் என்கிற மகன் உள்ள நிலையில், அவர் இரண்டாவது முறையாக, கர்ப்பமாக இருக்கும் செய்தியை, பிரபல நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான சுஜா வருணி புகைப்படம் வெளியிட்டு தெரியப்படுத்தியுள்ளார்.

தமிழ் திரையுலகில், 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ராதிகா. இவர் நடிகையாக இருந்தாலும், இவருடைய மகளை அவருடைய விருப்பம் போலவே வளர்த்தார்.  

இந்நிலையில் ரேயான் கடந்த 2016  ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த, இந்தியன் கிரிக்கெட் வீரர், அபிமன்யு மிதுனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு, ஏற்கனவே தாரக் என்கிற அழகிய ஆண் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார்.

இதையடுத்து, ரேயானுக்கு கடந்த 15 ஆம் தேதி, அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணி, ரேயான் கர்ப்பமாக இருந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஜா வருணி வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ...