ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் நம்பிக்கை இல்லை. பலரைக் காதலிப்பதில் தவறில்லை அதிலும் தினமும் ஒருவரைக் காதலிப்பதும் தவறில்லை என்று அதிரடியாக பேசியுள்ளார். 

ரஜினியுடன் காலா படத்தில் நாயகியாக நடித்த ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்து கலங்கடித்தவர். இந்த நிலையில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு துளியும் நம்பிக்கை இல்லை எனக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். ’’ ஒருவனுக்கு ஒருத்தி என்பது பழமையான விசயம் எனக்கு அதில் நம்பிக்கையில்லை.

தினமும் ஒவ்வொருவருடன் இருப்பது என்பது தினமும் மாறக் கூடிய விஷயம். அது கட்டாயமாக இருக்க வேண்டிய விஷயம் இல்லை. நான் பலரை காதலிக்கவே விரும்புகிறேன். அப்படிப்பட்ட வாய்ப்பு எனக்கு ஒவ்வொரு நாளும் தேவை. பலருடன் காதலில் ஈடுபடுவது தவறில்லை. ஒரே நேரத்தில் பலரை வெவ்வேறு சூழ்நிலைகளில் நான் காதலித்து இருக்கிறேன். நடிப்பை நான் எப்படி காதலிக்கிறேனோ அதுபோல் தான் காதலும். அதற்கு கட்டுப்பாடுகள் வைப்பது தவறு’’ எனத் தெரிவித்துள்ளார். 

ராதிகா ஆப்தே, பெனிடிக்ட் டெய்லர் என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்து வாழ்ந்து வரும் ராதிகா ஆப்தே இப்படி ஒரு கருத்து கூறியுள்ளது ரசிகரளிடம் பெரும் அதிர்வை கிளப்பியுள்ளது.