ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டை மீட்க போராடும் பல லட்ச இளைஞர்களுக்கு குரல் கொடுத்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதில் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மட்டும் இல்லாமல், பல பிரபலங்கள் மற்றும் இளைஞர்களும் சேர்ந்து பீட்டாவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராடி வருகின்றனர் .
இதில் பேசிய மூத்த நடிகர் ராதாரவி, பீட்டா அமைப்பை முதலில் வெளியேற்ற வேண்டும் என கூறினார், மேலும் அமெரிக்காவில் இருந்து வந்து எங்களுடைய கலாச்சாரத்தை முடக்க நீ யார் நாயே.... வெளியே போ என மிகவும் ஆக்ரோஷமாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், என் நாட்டு பிள்ளைகள் தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக எந்த ஒரு பேதமும் இன்றி தங்களுடைய கலாச்சாரத்தை மீட்க பொங்கி எழுந்து போராடுவது போல, வேறு எந்த நாட்டில் உள்ளவர்களும் நடத்திட முடியாது என கூறினார்.
மேலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரும் வரை ஒரு வாரம் கூட ஆனாலும் இந்த போராட்டம் மாபெரும் போராட்டமாக மாறி தொடர்ந்து நடைபெறும் என கூறினார்.
