radharavi talk about dhanush

தமிழ் சினிமா மூத்த நடிகர்களில் ஒருவர் நடிகர் ராதா ரவி. தன்னுடைய தந்தை போலவே பொது மேடைகளில் கூட குசும்பான பேச்சால் அனைவரையும் கலாய்த்து சிரிக்க வைப்பார்.

பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ள இவருக்கு, நடிகர் தனுஷுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளதாம். 

தன்னுடைய ஆசையை நேரடியாகவே ஒரு முறை, தனுஷிடம் கூறினாராம் ராதாரவி. அதற்கு தனுஷும் சார் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டேனா என மனதில் எதோ வருத்தத்தை வைத்துக்கொண்டு நன்றாக பேசுவது போல் பேசியுள்ளார்.

இதுகுறித்து தற்போது பேசியுள்ள ராதாரவி. நானே சென்று கூட தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்புக் கேட்டேன் அவர் சரி என்று கூறினார் ஆனால் இதுவரை தன்னை ஒரு முறைக் கூட அழைக்காமல் ஏமாற்றிவிட்டார்.

பின் ஒரு நண்பர் மூலமாகத்தான் தெரிந்தது தனுஷ் தன் மீது மனவருத்தத்தில் உள்ளார் என்று. சின்னதாய் இருவருக்கும் இடையில் ஒரு இடைவெளி என்றும் ராதாரவி குறிப்பிட்டுள்ளார்.