தமிழ் சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த, மூத்த நடிகர் ராதாரவி. ஓவ்வொரு கதாபாத்திரத்திலும் வாழ்ந்து நடிக்கும் மிக சிறந்த கலைஞன் என்று சொன்னால் அது மிகையாகாது.

இவர் ஏற்கனவே திமுகவில் இருந்து அரசியல் செய்து வந்தவர் சில காரணங்களால் அதிலிருந்து விலகி அதிமுக வில் இணைந்து எம்.எல்.ஏவாகவும் 
 இருந்தார் ராதாரவி.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் வாகை சந்திரசேகரின் மகள் திருமணத்திற்கு பழனிக்கு சென்றவர் ஸ்டாலினை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது அப்போது தீடீர் என தான் திமுகவில் விரைவில் சேருவேன் என மேடையில் பேசினார்.

இது குறித்து செய்தியர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அவர் தனக்கு இரண்டு அதிமுகவில் இருக்க விருப்பமில்லை எனவே திமுகவில் இணைவேன் என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளால் அவர் நாளை அக்கட்சி தலைவரை சந்தித்து திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.