Asianet News TamilAsianet News Tamil

கண்கலங்கி அழுத பிக்பாஸ் ரக்ஷிதா.. மௌனம் வெளிப்படுத்திய ஆயிரம் வலிகள்! பதறியபடி ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

பிரபல சீரியல் நடிகை, ரக்ஷிதா மகாலக்ஷ்மி ஆயிரம் வலிகளுடனும், மனக்குமுறலுடனும் கண்ணீர் சிந்தியபடி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
 

Rachitha Mahalakshmi crying Instagram post goes viral
Author
First Published Jul 24, 2023, 11:53 PM IST

வெள்ளித்திரை பிரபலங்களுக்கு நிகராக ரசிகர்களை கொண்டுள்ள சின்னத்திரை பிரபலங்களில் ஒருவர் ரக்ஷிதா மகாலட்சுமி. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள வீடியோ ஒன்றை பார்த்து, பதறியபடி ரசிகர்கள் அவருக்கு தங்களின் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிரிவும் சந்திப்போம்' சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானவர் கன்னட சீரியல் நடிகையான  ரக்ஷிதா மகாலட்சுமி. இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதை தொடர்ந்து இவர் நடித்த சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், போன்ற சீரியல்களும், விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் இவருக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது.

Rachitha Mahalakshmi crying Instagram post goes viral

ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட யோகி பாபுவின் இன்றைய சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

ரக்ஷிதா கடந்த 2013 ஆம் ஆண்டு, பிரிவோம் சந்திப்போம் சீரியலில் கோ ஸ்டாராக  நடித்த தினேஷ் என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருந்தாலும், பின்னர் அவ்வப்போது சில பிரச்சனைகள் எழ துவங்கியது.  இதற்க்கு முக்கிய காரணம், ரக்ஷிதா தொடர்ந்து சீரியலில் நடித்து வந்ததால், குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்தது என கூறப்பட்டது.

Rachitha Mahalakshmi crying Instagram post goes viral

முடிவுக்கு வந்த பிரபல சன் டிவி தொடர்! புதிய தொடர் என்ன தெரியுமா?

ஆனால் ரக்ஷிதா இதுவரை தன்னுடைய கணவருக்கும், தனக்கும் உள்ள பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசியதில்லை. 'பிக்பாஸ்' வீட்டிற்குள் ரக்ஷிதா இருந்தபோது, தினேஷ் இது சாதாரண குடும்ப சண்டை தான் என்றும், கண்டிப்பாக இருவரும் சேர்ந்து வாழ்வோம் என தெரிவித்தார். ஆனால் பிரச்சனை கை மீறி போகவே தற்போது இருவரும் விவாகரத்து பெற்று பிரியும் நிலையில் உள்ளனர். அதேபோல் ரக்ஷிதா தினேஷ் மீது மிகுந்த கோபத்தில் இருப்பதால், பிக்பாஸ் வீட்டில் கூட கணவர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் வெளியே இருந்தபடி, ரக்ஷிதாவுக்கு தன்னுடைய ஆதரவை தொடர்ந்து தெரிவித்து வந்தார் தினேஷ்.

Rachitha Mahalakshmi crying Instagram post goes viral

அஜித்தின் ரீல் பேபி அனிகாவா இது? ஸ்ட்ராப் லெஸ் உள்ளாடை போன்ற ஆடையில்... உச்சகட்ட கவர்ச்சியில் அனிகா! போட்டோஸ்!

இந்நிலையில் ரக்ஷிதா நயன்தாராவின், இதுவும் கடந்து போகும் பாடல் பேக் ரவுண்டில் ஓட, தன்னுடைய மன வேதனை மற்றும் வலிகளை மௌனத்தின் மூலம் வெளிப்படுத்தும் விதமாக கண்ணீர் சிந்தி அழுத வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இந்த வீடியோவை பார்த்து பதறியபடி ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.  இந்த வீடியோவுடன் அவர் போட்டுள்ள பதிவில், வலிமையான அனைத்து ஆன்மாவிற்காக...  கடந்த வருடங்களை நீங்கள் எப்படி கையாண்டீர்கள் என்று பெருமைப்படுங்கள். இந்த மௌன போர்கள், உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டிய தருணத்தில் உங்கள் கண்ணீரை துடைத்துக் கொண்டு... உங்கள் முதுகில் உங்களை தட்டிக் கொள்ளுங்கள் பாடலில் ஆழமாக போகிறேன் கண்களை நிறைக்கும் அந்த மந்திர வார்த்தைகள் என தெரிவித்துள்ளார். இந்த பதிவு மற்றும் வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

 

Follow Us:
Download App:
  • android
  • ios