Raavana Koottam OTT: 'இராவண கோட்டம்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் சாந்தனு நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான, 'இராவண கோட்டம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
'மதயானை' கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், நடிகர் சாந்தனு கதாநாயகனாக நடித்திருந்த திரைப்படம் 'இராவண கோட்டம்'. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கயல் ஆனந்தி நடித்திருந்தார். மேலும் பிரபு, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
தமிழ் திரையுலகில் அறிமுகமானதில் இருந்தே, தனி ஹீரோவாக வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்த சாந்தனுவுக்கு, இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சாந்தனுவின் நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது.
திறமைக்கு மரியாதை! எவரெஸ்ட் ஏறி சாதனை படைத்த ராஜசேகர் பச்சையை நேரில் சந்தித்து வாழ்த்திய அஜித்!
கடந்த 1957 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம், கருவேலம் காட்டு அரசியலை அழுத்தமாக பேசியது. இதனால் குறிப்பிட்ட சாதியினரை தாக்கி பேசுவது போல், இப்படம் எடுக்கப்பட்டிருந்ததாக சில சர்ச்சைகள் கிளப்பியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிலர் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தினர்.
இந்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுக்கும் விதமாக, படக்குழு அறிக்கை வெளியிட்ட நிலையில், ஒருவழியாக இந்த படத்தின் சர்ச்சைகள் ஓய்ந்தது. வசூலிலும், விமர்சன ரீதியாகவும் பாராட்ட பெற்ற இப்படம்.. ஜூன் 16ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.