Asianet News TamilAsianet News Tamil

Pushpa Movie Release Date: போடுடா வெடிய... வெளியானது 'புஷ்பா' படத்தின் ரிலீஸ் தேதி!!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடித்திருக்கும் 'புஷ்பா' (Pushpa) திரைப்படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு, வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்த நிலையில், தற்போது 'புஷ்பா' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

pushpa movie release date officially announced
Author
Chennai, First Published Nov 17, 2021, 8:27 PM IST

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடித்திருக்கும் 'புஷ்பா' (Pushpa) திரைப்படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு, வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்த நிலையில், தற்போது 'புஷ்பா' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் திரைப்படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல், மற்றும்  மரம் கடத்தலை மையமாக வைத்தும்...  அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.  இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திடாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

pushpa movie release date officially announced

மேலும் பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். அதே போல் ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின், ஃபர்ஸ்ட் லுக், மற்றும் இரண்டு லிரிக்கல் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் , சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

pushpa movie release date officially announced

இந்த படத்தில் நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். வள்ளி என்கிற கிராமத்து பெண்ணாக நடித்துள்ள இவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியான நிலையில்... இதுவரை காட்டாத அளவுக்கு வேறு லெவல் கவர்ச்சியை வாரி இறைத்துள்ளார். மேலும், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதனை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios