puriyatha puthiir movie collection is low
நடிகர் விஜய் சேதுபதி கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்தெடுத்து நடிப்பவர். இவர் நடித்தால் கண்டிப்பாக அந்த திரைப்படம் ஹிட் என்கிற எண்ணம் தமிழ் ரசிகர்களிடம் உண்டு.
இந்நிலையில் கடந்த வாரம், விஜய் சேதுபதி மற்றும் நடிகை காயத்ரி நடித்த "புரியாத புதிர்" திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகாததால் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என தயாரிப்பு நிறுவனம் புலம்பி வருகிறதாம்.
இந்த திரைப்படம் மிகவும் குறைவான திரையரங்குகளில் வெளியாக காரணம். அஜித் நடித்த "விவேகம்" திரைப்படம் தான். விவேகம் அனைத்து தரப்பினரிடமும் கலவையான விமர்சனங்களை பெற்றதால், இரண்டாவது வாரத்தை விவேகம் தொடாது என நம்பி பல்வேறு சர்ச்சைகளை தாண்டி "புரியாத புதிர்" திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியது.
ஆனால் விவேகம் திரைப்படம் தற்போது வரை அனைத்து திரையரங்கங்களிலும் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதால், "விஜய் சேதுபதியின்" புரியாத புதிர் திரைப்படத்திற்கு நிறைய திரையரங்குகள் கிடைக்கவில்லை. இந்த நிலையை தவிர்க்க புரியாத புதிர் திரைப்படத்தை விஜய் சேதுபதி, சில நாட்களுக்கு பிறகு ரிலீஸ் செய்ய கோரி படக்குழுவிடம் தெரிவித்திருக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தி கிசுகிசுத்து வருகின்றனர்.
