புனீத் ராஜ்குமார் மறைவுக்கு பின் வெளியாக உள்ள கடைசி படம் என்பதால் ஜேம்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட முன்னணி நடிகரான புனீத் ராஜ்குமார் கடந்த செப்டம்பர் மாதம் 29-ந் தேதி அன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருடைய மரணம் கன்னட திரையுலகை மட்டுமல்லாமல், கர்நாடக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 46 வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத்தை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது தந்தையும் நடிகருமான ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே புனீத் ராஜ்குமாரின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிகர் புனீத் ராஜ்குமார் கடைசியாக நடித்த படம் ஜேம்ஸ். சேத்தன் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் புனீத் ராஜ்குமார், சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார். மேலும் பிரியா ஆனந்த், சரத் குமார், ஆதித்யா மேனன், ஷிவராஜ் குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

புனீத் ராஜ்குமார் மறைவுக்கு பின் வெளியாக உள்ள கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இப்படம் வருகிற மார்ச் மாதம் 17-ந் தேதி புனீத் ராஜ்குமாரின் பிறந்தநாளன்று வெளியாக உள்ளது. இப்படம் வெளியாகும் தினத்திலிருந்து ஒரு வாரத்துக்கு வேறு எந்த கன்னட படமும் வெளியிடப்படக்கூடாது என கன்னட நடிகர் சங்கத்தினர் ஒருமனதாக முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஜேம்ஸ் படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அசத்தலான ஆக்‌ஷன் காட்சிகள், மிரட்டலான பஞ்ச் வசனங்கள் என டீசர் முழுவதும் தன நடிப்பால் ரசிகர்களை அசர வைத்துள்ளார் புனீத் ராஜ்குமார். இத்தகைய திறமையான நடிகரை இனி திரையில் காண முடியாதே என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். 

YouTube video player