குக் வித் கோமாளி ப்ரோமோவில்  புகழ் இல்லாதது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த  செஃப் தாமு புகழ் 100 சதவீதம் குக் வித் கோமாளி 3-ல் இருப்பார் என உறுதியாக கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதிக பார்வையாளர்களைக் கடந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது. பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் பலருக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் நிகழ்ச்சியாக உள்ளதால் இதற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதல் சீசனில் வனிதா, ரம்யா பாண்டியன், உமா ரியாஸ், ரேகா, உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். இதில் வனிதா முதல் பரிசை வென்றார். அதேபோல் இரண்டாவது சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக களமிறங்கினர். இதில் கனி இறுதிப்போட்டியில் வென்றார்.

இந்நிகழ்ச்சியின், சிறப்பம்சம் என்னவென்றால், அது கோமாளிகள் தான், அதன்படி புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, சக்தி ஆகியோர் கோமாளிகளாக இரண்டு சீசன்களிலும் கலக்கினர். 

வெற்றிகரமாக இரண்டு சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது 3-வது சீசனுக்கான அறிவிப்பு வந்தாச்சு. இதற்கான மாஸான புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புரோமோவில் செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் உடன் கோமாளிகளான மணிமேகலை, சிவாங்கி, பாலா, சுனிதா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். ஆனால் ரசிகர்களின் பேவரைட் கோமாளியான புகழ் இந்த புரோமோவில் இடம்பெறவில்லை.

இந்த வீடியோவை சமீபத்தில் செஃப் தாமு தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது புகழ் அந்த ப்ரோமோவில் இல்லாதது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த செஃப் தாமு புகழ் 100 சதவீதம் குக் வித் கோமாளி 3-ல் இருப்பார் என உறுதியாக கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.