Dhanush D51 Shooting: தனுஷின் படப்பிடிப்பால்... கடுமையான போக்குவரத்து பாதிப்பு..! பொதுமக்கள் அவதி..!

நடிகர் தனுஷ் நடித்து வரும் D51 படத்தின் படப்பிடிப்பு காரணாமாக, சில திருமலை செல்லும் பாதைகள் முடக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதி படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Public Suffered from Dhanush D51 movie Shooting mma

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், நடிகர் என்பதைத் தாண்டி வெற்றிகரமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் தன்னை ரசிகர்கள் மனதில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தனுஷ் பா.பாண்டி படத்தின் வெற்றிக்கு பின்னர், தன்னுடைய 50-ஆவது படத்தை இவரே இயக்கி உள்ளார். 

50-வது படத்தில் படப்பிடிப்பு முடிந்த கையேடு, 51 வது படத்தில் பிஸி ஆகி உள்ளார். இயக்குனர் சேகர் காமுலா இயக்கத்தில், தனுஷ் தன்னுடைய 51வது படத்தில் நடித்து வருகிறார். அரசியல் கதைகளத்தில் உருவாக உள்ள இந்த திரைப்படம், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Public Suffered from Dhanush D51 movie Shooting mma

பிக்பாஸுக்கு பின் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் முட்டி கொண்ட தினேஷ் - விசித்ரா! வெளியேறிய பிரபலம்!

இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து, மிக முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவும் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் முதல் கட்ட படபிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் படபிடிப்பால் பொதுமக்கள் பலர் அவதியுற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Public Suffered from Dhanush D51 movie Shooting mma

Hansika Workout Photos: உடலை வில்லாக வளைத்து.. தலைகீழாக தொங்கியபடி ஒர்க் அவுட் செய்து மிரள வைக்கும் ஹன்சிகா!

அதாவது நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு, அலிபிரி அருகே நடந்து வருகிறது. இதனால் திருமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள், தடுத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் செல்லும்படி போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். இதனால் மிகவும் குறுகலான 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலையில்' கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சிறுவர்கள், வயதானோர் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால்... தனுஷின் படபிடிப்புக்கு தங்களின் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios