நடிகர் கமலஹாசனின் சகோதரர், சாருஹாசனை வைத்து 'தாதா 87' படத்தை இயக்கிய, இயக்குனர் விஜய் ஸ்ரீஜி அடுத்ததாக இயக்க உள்ள திரைப்படம் (பொல்லாத உலகில் பயங்கர கேம்). இந்த படத்தின் பெயரை ஷாட்டாக 'பப்ஜி' என வைத்துள்ளனர்.  

இந்த படத்தில், பிக்பாஸ் புகழ், நடிகை ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்து வருகிறார். நடிகர் விக்ரமின் மருமகன் அர்ஜூமன் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் பிக் பாஸ் ஜூலி , மொட்ட ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறன்றனர் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்த படத்தில் நடிக்கும் மற்ற மூன்று நடிகைகள் யார் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. கேரளாவை சேர்ந்த அனித்ரா நாயர் , பெங்களூரை சேர்ந்த நிவேதா பட்டுலா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சாந்தினி ஆகியோர் தான் அந்த மூன்று  நடிகைகள். மிகுந்த பொருட்செலவில் காமெடி த்ரில்லராக இப்படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது இந்த படத்தில் இணைந்துள்ள மூன்று நடிகைகளில் அழகை பார்த்து கோடம்பாக்கமே வாயடைத்து போய் உள்ளதாம். கூடிய விரைவில் இந்த மூன்று நடிகைகளும் அடுக்கடுக்காக பல படங்களில் நடிக்க கமிட் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

அந்த அழகிய மூன்று கதாநாயகிகள் புகைப்படம் இதோ...