19வது ஆசிய போட்டியில் பிடி உஷா சாதனையை சமன் செய்த நித்யாவுக்கு செண்பகமூர்த்தி பரிசு வழங்கி பாராட்டு!

சைனாவில் நடந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யா ராமராஜ் அவர்களுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி பரிசு வழங்கி பாராட்டியுள்ளார். 
 

PT Usha record breaker nitya meet red giant shenbagamoorthy

கோயம்புத்தூரில் ஏழைத்தாயுடன் எளிமையான குடும்பமாக வாழ்ந்து வரும் வித்யா, நித்யா,இந்த இரட்டையர்கள் இருவரும், சிறு வயது முதலே விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களின் திறமையறிந்து சென்னை மாவட்ட  மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர், M.செண்பகமூர்த்தி, இருவரையும் ஊக்கப்படுத்தி, பல உதவிகள் செய்து வருகிறார். ஆசிய போட்டிகளில் இவர்கள் கலந்து கொள்வதற்கு ,அவர்களுக்கு தேவையான காலணி முதல் பல பரிசுகளை வழங்கி  உதவிகளைச் செய்துள்ளார். 

PT Usha record breaker nitya meet red giant shenbagamoorthy

Kajal Aggarwal: கால் முளைத்த பூவே! கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் காஜல் அகர்வால் நடத்திய ஹாட் போட்டோ ஷூட்

ஆசிய போட்டியில் வித்யா 400 மீட்டரில் தங்கப்பதக்கம் வாங்கி சாதித்ததுடன் மேலும் பல சாதனைகள் செய்துள்ளார். நித்யா 400 மீட்டர் தடை தாண்டி ஓடுதல் போட்டியில் கலந்துகொண்டு வெண்கல மெடல் பரிசும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் மற்றும், 400 மீட்டர் கலப்பு ஓட்டத்தில் சில்வர் மெடல் பெற்று சாதனை செய்துள்ளார். ஆசிய போட்டிகளில் மட்டுமல்லாது தேசிய அளவிலான போட்டிகளிலும் தமிழகம் சார்பில் இந்த இரட்டையர்கள் கலந்துகொண்டு, பல சாதனைகள் படைத்து வருகிறார்கள். சமீபத்தில் தேசிய அளவில் மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் கலந்து கொண்ட நித்யா 56.01 நொடிகளில் ஓட்ட தூரத்தை கடந்து, சாதனை செய்துள்ளார். மேலும் ஓட்ட  வீராங்கனை பி டி உஷா செய்த இந்த சாதனையை வித்யா சமன் செய்துள்ளார். 

PT Usha record breaker nitya meet red giant shenbagamoorthy

அப்போ இல்ல.. இல்லனு சொன்னதெல்லாம் உருட்டா? ரவீனாவை காதலிக்கும் மேட்டரை பிக்பாஸ் வீட்டில் ஓப்பன் செய்த மணி!

இதை தொடர்ந்து ரெட் ஜெயின் M.செண்பகமூர்த்தி, சாதனை செய்த இந்த இரட்டை வீராங்கனைகளை அழைத்துப் பாராட்டியதுடன் அவர்களுக்கு நிதி உதவியையும் விளையாட்டு போட்டிகளுக்குக்குத் தேவையான உபகரணங்களையும் பரிசாக வழங்கியுள்ளார்...தொடர்ந்து ஏழ்மை நிலையில் உள்ள விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு எப்போதும் தாங்கள் உதவுவோம் என்றும் மகிழ்ச்சியுடன் அவர்களை அனுப்பி வைத்தார்.

இந்த செய்தி, மற்றும் பபுகைப்படங்கள் வெளியாக, பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை ரெட் ஜெயின் மூவிஸ்  செண்பகமூர்த்திக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios