இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் விஷால், பிரசன்னா, அனு இமானுவேல், நடித்த 'துப்பறிவாளன்' படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது 'சைக்கோ' படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் மிஷ்கின். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், டிசம்பர் 27-ஆம் தேதி இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தொடர்பாக எழுந்த பிரச்சினை  காரணமாக படத்தின் ரிலீஸில் ஒரு சில பிரச்சனைகள் எழுந்தது.  நேற்றைய தினம் படத்தின் தலைப்பு பிரச்சனையும் தீர்ந்து அதற்கான கிளியரன்ஸ் சான்றிதழ் சென்சார் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டதை தொடர்ந்து, இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 24ஆம் தேதி 'சைக்கோ' திரைப்படம், உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர். அங்குமாலா கதையை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக  கண்தெரியாத வேடத்தில் நடித்துள்ளார். நடிகை அதிதி ராவ், நித்யாமேனன், இயக்குனர் ராம், உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.