proverb task big boss give big shock for all contestants
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு திரும்பவும் 'பள்ளிக்கு போகலாமா' என்கிற ஒரு டாஸ்க் வைத்துள்ளனர். இதற்கு தலைமை ஆசிரியராக இருப்பவர் கவிஞர் சினேகன்.
ஏற்கனவே இவர்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து முதல் நாள் பாடமாக நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது நாள் பாடமாக பழமொழி கற்றுக்கொள்வோம் என்கிற பெயரில் 13 போட்டியாளர்களுக்கும் பழமொழி சொல்லிக்கொடுக்கப்பாது.
அனைவருக்கும், கவிஞர் சினேகன் அவர்களுக்கு சில பழமொழிகளை சொல்லிக்கொடுத்தார், அதிலும் முக்கியமாக காயத்ரிக்கு "ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்காதே". கஞ்சாக்கருப்புக்கு "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" ஓவியாவிற்கு "மோகம் 30 நாள் ஆசை 60 நாள்" போன்ற பழமொழிகளை சொல்லிக்கொடுத்தார்.
சில மணி நேரங்கள் கழித்து அனைவரும் மீண்டும் பள்ளி வகுப்பறைக்குள், வந்து ஒவ்வொருவராக பழமொழியை சொல்ல தொடங்கினர். சக்தி தன்னுடைய பழமொழியை காயத்திரி, கஞ்சாகருப்பு, மற்றும் தனக்கு தானே டெடிகேட் செய்து கொள்வதாக கூறினார்.
இதே போல ஒருவர் பின் ஒருவராக வந்து தங்கள் கற்றுக்கொண்ட பழமொழியை மற்றவர்களுக்கும், தங்களுக்கும் என டெடிகேட் செய்துக்கொண்டனர்.
ஒருவழியாக அனைவரும் நல்ல விதத்தில் ஒரு பழமொழியையாவது சொல்லி முடித்துள்ளதால் கண்டிப்பாக நல்ல ரிசல்ட் வரும் என்று கார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு. காலை வாருவதுபோல் ரிசல்ட் வந்தது. காரணம் அனைவரும் தங்கள் கூறிய பழமொழியை அடுத்தவர்களுக்கு, தங்களுக்கும் டெடிகேட் செய்ததற்காக யாருக்கும் பாயிண்ட்ஸ் இல்லை என அறிவிக்கப்பட்டது இதனால் கஷ்டப்பட்டு பழமொழி கற்றுக்கொண்ட போட்டியாளர்கள் ஒரு நிமிடம் செம டென்ஷன் ஆகி விட்டனர்.
