யாஷிகா ஆனந்தின் (Yashika Anand) முன்னாள் காதலன் (Ex - boy friend) என்பதால் பெருமையாக சொல்கிறேன், என்று நிரூப் (Niroop) கூறுவது புரோமோவில் வெளியாகியுள்ளது. 

யாஷிகா ஆனந்தின் முன்னாள் காதலன் என்பதால் பெருமையாக சொல்கிறேன், என்று நிரூப் கூறுவது புரோமோவில் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இந்த முறை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளதால், கடந்த வாரத்தின் லக்சுரி டாஸ்க் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. நேற்றைய தினம், அபிஷேக், தாமரை செல்வி ஆகியோர் தங்களது சோகங்கள் மற்றும் வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்ட நிலையில் தற்போது, நிரூப் பேசும் புரோமோ வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: 37 வயதிலும் முட்டி மேல் குட்டை உடை அணிந்து... முரட்டு கவர்ச்சியில் தெறிக்கவிடும் பிரியாமணி!!

நிரூப்பை பொறுத்தவரை, பலரும் அவர் மிகவும் வலிமையான போட்டியாளர் என்கிற ஒரே காரணத்திற்காகவே அதிகம் டார்கெட் செய்து அவரை நாமினேட் செய்ததை பார்த்தோம். மற்றபடி இதுவரை எந்த ஒரு நெகடிவ் விமர்சனங்களையும் சந்திக்காமல், அனைவருடனும் நன்றாக பேசுவது, ஒற்றுமையுடன் செயல்படுவது என வெற்றியை நோக்கி விளையாடி கொண்டிருக்கிறார்.

மேலும் செய்திகள்: சிறை உணவை சாப்பிட மறுக்கும் ஆர்யன் கான்..!! இப்படி தான் வாழ்கிறாரா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இன்றய தினம் இவர் தன்னை பற்றி கூறும் போது, பலரும் யாஷிகாவின் முன்னாள் காதலன் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார் என்றே சொன்னார்கள். அவருடைய காதலன் என்பதால் என்பதை பெருமையாக சொல்கிறேன். சினிமாவை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது அவர் தான் எனக்கு திரையுலகை பற்றிய அனுபவத்தை ஏற்படுத்தியவர். ஒரு பெண்ணால் ஒரு ஆண் வளர கூடாத என, அவர் சொன்னதும், இதை பார்த்து கொண்டிருந்த சக போட்டியாளர்கள் கை தட்டி வரவேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்: முழு பூசணிக்காயை சோத்துல மறைத்த இசைவாணி..! திருமணம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசலையே..! ஏன்?

இந்த புரோமோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது...

Scroll to load tweet…