- Home
- Cinema
- முழு பூசணிக்காயை சோத்துல மறைத்த இசைவாணி..! திருமணம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசலையே..! ஏன்?
முழு பூசணிக்காயை சோத்துல மறைத்த இசைவாணி..! திருமணம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசலையே..! ஏன்?
பிக்பாஸ் சீசன் 5 (Biggboss season 5 tamil) நிகழ்ச்சி போட்டியாளர்களின் ஒருவரான இசை வாணி (Isai Vani) , தான் கடந்து வந்த பாதை குறித்து பேசும் போது தன்னுடைய திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்? என நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கி மிகவும் பரபரப்பாகவும், கலகலப்பாகவும் இதுவரை பெரிதாக எந்த பிரச்னையும் இன்றி சென்றுகொண்டிருக்கிறது.
கடந்த நான்கு சீசன்களில் போட்டியாளராக 16 மட்டுமே கலந்து கொண்ட நிலையில், இந்த முறை 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டு விளையாடி வருகிறார்கள்.
பிக்பாஸ் ரசிகர்களும், யார் எப்படி பட்டவர்கள் யாருக்கு ஓட்டு போட்டு காப்பாற்றலாம், என அவர்களது குணாதிசயத்தை கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.
இதுவரை எந்த ஒரு போட்டியாளரும் பெரிதாக விமர்சனங்களுக்கு ஆளாகாத நிலையில், கானா பாடகி என்கிற விதத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள இசை வாணி தான், முதல் முதலில் தன்னுடைய சோக கதையை கூறி நிகழ்ச்சியை துவங்கிவர்.
அப்போது சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டோம், இப்போது வரை சொந்த வீடு இல்லை, உடுத்தி கொள்ள சரியான துணி இல்லை, அப்பாவுக்கு பாட யாரும் வாய்ப்பு தரவில்லை என பக்கம் பக்கமாக பேசிய இசை, ஏன் ஒரு வார்த்தை கூட தன்னுடைய திருமணம் குறித்து பேசவில்லை என்பதே பலரது கேள்வியாக மாறியுள்ளது.
இசைவாணிக்கும், கானா பாடகர் ஸ்ரீ காந்த் தேவா என்பவருக்கும் திருமணம் ஆகி பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இவர்களுடைய திருமணம் புகைப்படங்கள் மற்றும் இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்து தான், பிக்பாஸ் ரசிகர்கள் ஏன் தன்னுடைய திருமணம் மற்றும் விவாகரத்து பற்றி பேசாமல் மறைத்தார் என கேள்வி எழுப்பி வருவதோடு, இவர் மீது நெகடிவ் விமர்சனங்கள் தோன்றவும் இது காரணமாக அமைந்துள்ளது.
ஆனால் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான பவானி ரெட்டி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த திருமணம், கணவர் மரணம், இரண்டாவது காதல் தோல்வி என அனைத்தையும் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.