protest in against kala audio launch

இன்று, மாலை 6:30 மணியளவில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற உள்ளது. 

மிக பிரமாண்டமாக நடைபெற உள்ள இந்த விழா நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைப்பெறுகிறது. இந்த விழாவில் பல பிரபலங்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் "சுடரும் சுழலும் இலக்கிய உறவுகள் கூட்டமைப்பை" சேர்ந்த சிலர், நிகழ்ச்சி நடைபெற உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தை முற்றுகையிட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை கர்நாடகாவை சேர்ந்த ரஜினிகாந்த், நடித்த காலா படத்தின் இசையையும், இந்த படத்தையும் வெளியிடக் கூடாது என்றும், இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கூறியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் நந்தனம் பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்பூரப் படுத்தி வருகின்றனர்.