ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து 6 நாட்கள் மாணவர்களுடனும் , இளைஞர்களுடனும் போராட்டத்தில் கலந்து கொண்டு போராடியவர் நடிகர் லாரன்ஸ்.
ஜல்லிக்கட்டை மீட்க வலியுறுத்தி இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவர்க்கும், ஒரு கோடிக்கும் மேல் செலவு செய்து உணவு முதல் அத்தியாவசிய தேவைகளான, பெட்ஷீட், தண்ணீர் போன்றவற்றை வழங்கினார்.
இந்த மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக ஜல்லிக்கட்டுக்கு தற்போது அவசர சட்டம் அறிவித்துள்ளது தமிழக அரசு. ஆனால் இதனை ஏற்க மாட்டோம் என்றும் நிரந்தர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தி 7வது நாளாக தொடர்ந்து மெரீனாவில் கூடியுள்ளனர் சில இளைஞர்கள்.
மேலும் இப்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை, போலீசார் தடியடி நடத்தி கலைத்து கொண்டிருக்கின்றனர். தமிழக முதலமைச்சரும் இன்னும் சில மாதங்களில் கண்டிப்பாக நிரந்தர சட்டம் போடும்வரை இளைஞர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அதே போல இளைஞர்களின் இந்த போரட்டத்தை சிலர் கலவராமாகவும், தவறான நோக்கத்தோடு எடுத்து செல்வதாக கூறியும் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இதனால் இன்று மெரினா கடற்கரையில் கூடிய மாணவர்களையும், இளைஞர்களையும் தற்காலிகமாக போராட்ட தை கைவிட்டு கலைந்து செல்லுமாறும் இந்த அறவழி போராட்டத்தை கலவரமாக மாற்ற வேண்டாம் என , நடிகர் லாரன்ஸ் வலியுறுத்தி உள்ளார் மேலும் தற்போது ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பித்தது உங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என கூறியுள்ளார் .
