protest against padmavath movie in chennai
நடிகை தீபிகா படுகோன், ரன்வீர் சிங் மற்றும் ஷாகித் கபூர் நடிப்பில் பல்வேறு சர்ச்சைகளை கடந்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் 'பத்மாவத்'. இந்த படத்தில் ராணி பத்மாவதியை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி, குஜராத், மகாராஷ்ரா உள்ளிட்ட இடங்களில் உள்ள பலர் இந்த படத்திற்கு எதிராக போர் கொடி தூக்கினர்.

சில அமைப்பை சேர்ந்தவர்கள் நடிகை தீபிகாவின் தலைக்கும் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் தலைக்கும் 5 லட்சம்... 10 லட்சம் என விலை பேசினர்.

தற்போது பல்வேறு போராட்டத்திற்கு பின், இன்று இந்தப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை ரிலீஸ் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை சென்னையில் 'பத்மாவத்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ள சத்தியம் திரையரங்கை முற்றுகையிட்டு 'இந்து யுவ வாஹினி' அமைப்பை சேர்த்த 50 க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பின், போராட்டத்தை கலைக்க போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்கள் உடன்படாததால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
