Promotion does not have cash Please do a little bit of Sir Request request to HR Raja ...

புரமோஷனுக்கு காசு இல்லை. கொஞ்சம் பாத்து எதாச்சும் பண்ணுங்க சார் என்று ஹெச்.ராஜாவுக்கு, பலூன் பட இயக்குநர் சினீஸ் ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அட கலாய்ச்சி இருக்காருங்க…

மெர்சல் படத்தை பட தயாரிப்பாளர் செய்த புரமோஷனைவிட பாஜக-வினர் மெர்சலுக்கு எதிராக வாயைக் கொடுத்து செய்த புரமோஷன்தான் அதிகம்.

தற்போது இந்தியா முழுவதும் ஹாட் டாபிக்காக மெர்சல் மாறியுள்ளது. அந்த அளவுக்கு பிரபலமடைந்து விட்டது

பாஜகவின் ஹெச்.ராஜா கூறிய வார்த்தைகளால், திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பாஜகவுக்கு எதிராக விமர்சிக்கத் தொடங்கினர். அவர்களை விட ஒருபடி மேலே சென்று விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அஜித் ரசிகர்களும் சேர்ந்து பாஜகவை சேர்ந்தவர்களை கலாய்த்து தள்ளினர். ஒருகட்டத்தில் மெர்சல் முரட்டுத்தனமாக பிரபலமடைய பாஜகவினர்தான் காரணம் என்பதை உணர்ந்த ரசிகர்கள் ஹெச்,ராஜவுக்கும், தமிழிசைக்கும் நன்றி கூட தெரிவித்தனர்.

இந்த நிலையில் பலூன் பட இயக்குனர் சினீஸ் ஸ்ரீதரன், “ஹெச் ராஜா சார், நானும் பலூன்னு ஒரு படம் பண்ணி வச்சுருக்கேன். புரமோஷனுக்கு காசு இல்லை. கொஞ்சம் பாத்து எதாச்சும் பண்ணுங்க சார்” என டிவீட் செய்துள்ளார்.

இயக்குனரின் இந்த டிவீட்டில், ஏராளமானோர் ஹெச்.ராஜா பாத்துக்குவார் என கமெண்ட் தெரிவித்துள்ளனர்.