தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

தலைவர், துணைத்தலைவர், செயலாளர்,பொருளாளர் என 27 பதவிகளுக்கான வாக்குப்பதிவு சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி கல்லூரியில் இன்று காலை தொடங்கியது.

இதில் கேயார், ஆர்.ராதாகிருஷ்ணன், விஷால் ஆகியோர் தலைமையில் மொத்தம் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. கேயார் மற்றும் ராதாகிருஷ்ணன் அணிகளை விட விஷாலின் நம்ம அணியே இத்தேர்தலில் அதிக செல்வாக்கு செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த வாரத்தில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவை நடத்தியது உள்ளிட்டவைகள் விஷால் அணிக்கு சாதகமாக அமையும் என்று கருதப்படுகிறது. இருப்பினும் பழைய தயாரிப்பாளர்கள் அனைவரும் கேயார் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கே ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.