நடிகை திரிஷா நடிப்பில், கடைசியாக கடந்த வருடம் 'பேட்ட' திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என 5 திற்கும் மேற்பட்ட படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள திரைப்படம், 'பரமபத விளையாட்டு' இந்த படத்தில், கதையின் நாயகியாக நடித்துள்ளார் திரிஷா.

இப்படத்தின் புரமோஷன் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தில் பணியாற்றிய அணைத்து கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த படத்தில் மிகவும் முக்கிய நபரான படத்தின் நாயகி திரிஷா ஒரு சில காரணத்தால், கலந்த கொள்ள முடியவில்லை.

இவரின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக, பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்... திருஞானம் என்னுடை நெருங்கிய நண்பர். படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என்றாலும் படம் பார்த்த அனைவரும் அருமையாக வந்துள்ளதாக கூறினர்.  

திருஞானம் எவ்வளவு கஷ்டப்பட்டு,  இந்த படத்தை எடுத்தார் என்று எனக்கும் தெரியும். பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுக்கும் போதே, போட்ட பணத்தை எடுப்பது மிகவும் கடினம்.  ஆனால், முழுக்க முழுக்க ரிஸ்க் எடுத்து இதனை பண்ணிக் கொண்டிருக்கிறார். 

ஆனால், இந்த ரிஸ்க்கை ஒரு கதாநாயகியை வைத்து எடுக்கும் போது, ப்ரோமோசின் நிகழ்ச்சிக்கு அவர் வரவேண்டும். அவரை தவிர இந்த படத்தை, யாரரும் ப்ரோமோட் செய்துவிட முடியாது. அனைத்து நடிகர்களும் புதுமுகங்கள் என கூறிய தயாரிப்பாளர் டி.சிவா, இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளாவிட்டால் வாங்கிய சம்பளத்தில் பாதியை தர வேண்டும் என, நடிகர் சங்கம் சார்பாக எச்சரித்துள்ளார். இவரின் இந்த பேச்சு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.