Asianet News TamilAsianet News Tamil

மவுன சாமியார் கமல் இவ்வளவு அசிங்கப்பட்ட பிறகாவது தனது விஷால் ஆதரவை விலக்கிக் கொள்வாரா?

தயாரிப்பாளஎ சங்க செயல்பாடுகளில் விஷால் குழுவினரின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி தமிழக அரசே ஷோ காஸ் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறது. இதன் பிறகாவது நடிகர் கமல் தனது விஷால் ஆதரவை விலக்கிக்கொள்வாரா அல்லது தேர்தல் பிரச்சாரத்திற்காக விஷாலின் தோலில் கைபோடுவாரா? என்று காரசாரமாகப் பேட்டி அளித்திருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

producer suresh kamatchi questions kamal
Author
Chennai, First Published Mar 10, 2019, 9:51 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தயாரிப்பாளஎ சங்க செயல்பாடுகளில் விஷால் குழுவினரின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி தமிழக அரசே ஷோ காஸ் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறது. இதன் பிறகாவது நடிகர் கமல் தனது விஷால் ஆதரவை விலக்கிக்கொள்வாரா அல்லது தேர்தல் பிரச்சாரத்திற்காக விஷாலின் தோலில் கைபோடுவாரா? என்று காரசாரமாகப் பேட்டி அளித்திருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.producer suresh kamatchi questions kamal

‘அமைதிப்படை 2’, ‘கங்காரு’ படங்களின் தயாரிப்பாளரும் ‘மிக மிக அவசரம்’ படத்தின் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி தனது பேட்டியில்,’’இளைஞர்கள்கிட்ட கொடுத்தா அப்படியே தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சங்க கட்டிடம் மாதிரி எழும்பி நிற்கும்னு சொல்லி ஓட்டுப் போடச் சொன்னாங்க... நம்ம ஆட்கள் நம்பி ஓட்டையும் போட்டாங்க...வந்ததிலிருந்து குரங்கு பூமாலையை பிச்சிப்போட்ட கதையா ஒண்ணும் மிச்சமில்லாம கருப்புடிங்கிட்டாங்க..சங்கம் மட்டும் பேர்ப்பலகையோட மிச்சமிருக்கு.

நான் மேடைக்கு மேடை அடிச்சிக்கிட்டேன். விஷால் வேணாம்.. வேணாம்னு... யார் காதும் திறக்கலை. நம்மளை காண்ட்ராவர்ஸி ஆளுன்னு உலகத்தை நம்ப வச்சதோட நிற்காம, சங்கத்தை பூட்டுப் போட்ட விவகாரத்துக்காக 28 தயாரிப்பாளர்களில் நானும் ஒருத்தனாக சஸ்பெண்ட் செய்யப்பட்டேன்.

அதிகாரம் ஆணவம் தான்தோன்றித்தனம் கொள்ளையடிக்கும் நோக்கம் இது எல்லாவற்றையும் எப்போதும் என்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. தொண்டை கிழியக் கத்தியும் செவிடான பல தயாரிப்பாளர்களின் காதுகளுக்கு இப்போது தமிழ்நாடு அரசே கணக்கு வழக்குப் பார்த்து நேர்மையற்ற சங்க நிர்வாகம் என்பதாக சங்கூதியிருக்கிறது.producer suresh kamatchi questions kamal

இப்போவாவது இவர்களின் கண் திறக்கட்டும். ஓட்டுப்போட்டவர்களுக்கு காசு கொடுக்க சொந்தக் காசை எடுக்காமல் சங்கக் காசை எடுத்துக் கொடுத்தார்கள். கேள்வி கேட்டவர்களை எதிரியாக்கி பகைமை வளர்த்தார்கள். யாருக்கு என்ன பிரச்சனை எனக் கேட்க நிர்வாகிகள் யாருமில்லை. போனை எடுக்கக்கூட ஆள் கிடையாது. இப்படிப்பட்ட மோசமான நிர்வாகம் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து கிடையாது. அப்படியொரு மோசமான நிர்வாகம் என ஆராய்ந்த அரசே காரித்துப்பியிருக்கிறது.

இளைஞர்கள் கிட்ட கொடுங்கன்னு வக்காலத்து வாங்கிய உலக நாயகனை இப்போ என்ன கேள்வி கேட்கலாம். தவறை தட்டிக் கேட்பாரா அல்லது அவர் சொன்ன மாதிரி நல்லவங்க தோள்ல ஒரு கையும், கெட்டவங்க மேல இன்னொரு கையும் போட்டுக்குவேன்ற மாதிரி சொல்லப்போறாரான்னு தெரியலை...கமல் இப்படிப்பட்டவர்களை ஆதரிக்க முழுக்க முழுக்க காரணம் தயாரிப்பாளர் தாணு மீது அவருக்கிருக்கும் பழிவாங்கும் படலத்தின் ஒரு பகுதிதான்.

அவரைப் போலவே இவர்களும் எதிரியாகவும் பொறுப்பற்றும் நடந்து கொண்டதை ஒருபோதும் கண்டிக்காதவராகத்தான் கமல் மவுன சாமியாகி இருந்தார். இப்போதாவது கண்டிப்பாரா? அல்லது தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆள் சேர்ப்பாரான்னு தெரியலை...producer suresh kamatchi questions kamal

கணக்கு கேட்டார்கள்... தேவையில்லாமல் செயல்பட்ட அலுவலகத்தை பூட்டினார்கள் என ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பிய இந்நிர்வாகத்தின் முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சங்க அலுவலகத்தை மூடினார்கள் என விசாலுக்கு ஆதரவாக அனுதாபத்தை உருவாக்கப் போராடிய ஒத்தூதும் குழுவுக்கும் சேர்த்தே குத்துவிட்டிருக்கிறது அரசு. அப்படியொரு அலுவலகமே விதி முறையற்ற செயல் என!

இவ்வளவு தூரம் வந்த பிறகாவது கமல் தனது ஆதரவை விலக்கிக் கொள்வாரா?? அல்லது வழக்கமாகப் போடும் தனது ஏழு மணி ட்வீட்டில் கண்டனத்தை பதிவு செய்தாலே போதும்?  செய்வாரா?’ என்று கேள்வி எழுப்புகிறார் சுரேஷ் காமாட்சி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios