Asianet News TamilAsianet News Tamil

2000 முதலைகளுக்கு சிக்கன்,மட்டனுக்காக 1கோடி ரூபாய் செலவழித்த தமிழ்ப்பட தயாரிப்பாளர்...

சுமார் 2,000 முதலைகளை 15 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து அவற்றுக்கு மட்டுமே ரூ.1 கோடிக்கும் மேல் செலவழித்ததாகவும் இதற்கு முன் இந்திய சினிமா இப்படி ஒரு முதலைக் காட்சிகளை திரையில் காட்டியிருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார் ‘ஆண்கள் ஜாக்கிரதை’படத்தின் இயக்குநர் முத்து மனோகரன்.
 

producer spends 1crore to crocodiles
Author
Chennai, First Published Jul 5, 2019, 12:56 PM IST

சுமார் 2,000 முதலைகளை 15 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து அவற்றுக்கு மட்டுமே ரூ.1 கோடிக்கும் மேல் செலவழித்ததாகவும் இதற்கு முன் இந்திய சினிமா இப்படி ஒரு முதலைக் காட்சிகளை திரையில் காட்டியிருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார் ‘ஆண்கள் ஜாக்கிரதை’படத்தின் இயக்குநர் முத்து மனோகரன்.producer spends 1crore to crocodiles

ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’. K.S.முத்துமனோகரன் கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா,ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் முத்து மனோகரன்,’இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்ய தூண்டும். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. ஒரு ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் மட்டும்தான் சிதையும். ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் சமுதாயமே பாதிக்கப்படும் என்ற கருத்தை சொல்கிறோம்.producer spends 1crore to crocodiles

இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் இது. ஒரு கோடிக்கு அதிகமாக செலவிட்டு  2000 முதலைகளை 15 நாட்களாக ஒரே இடத்தில் வைத்து அவைகளுக்கு உணவாக சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றை டன் கணக்கில் போட்டு அவைகளை தண்ணீருக்குள் இருந்து வெளியே வரவைத்து மிகவும் சிரமப்பட்டு எடுத்தோம்.கிளைமாக்ஸ் காட்சியில் அனைத்து முதலைகளும் ஒன்றாக சேர்ந்து வருவது போல் ஒரு காட்சி இருக்கிறது அந்த காட்சியை திரையில் பார்க்க படு பயங்கரமாக இருக்கம் அதுதான் இந்த படத்தின் ஹைலைட் காட்சி’ என்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios