நடிகை வரலட்சுமி சரத்குமார் உட்பட பலரையும் ‘யூஸ் அண்ட் த்ரோ’ டைப்பில் பயன்படுத்திக்கொண்டு தூக்கி எறியும் சுபாவமுள்ளவர் என்று மிகவும் சர்ச்சையாகப் பேசியுள்ளார் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ்.

நடிகர் விஷாலின் நடிகர் சங்கப்பதவியின் மூன்று ஆண்டுகாலம் முடிந்து விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.இந்நிலையில் விஷால் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார், தயாரிப்பாளரும் பில்லா பாண்டி பட கதாநாயகனுமான ஆர்.கே.சுரேஷ். இவர் ஹீரோவாக நடித்துள்ள ’கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.அமைதிக்குப் பின்னுள்ள மர்மத்தைப் பேசுகிற இப்படத்தை, மலையாள இயக்குநர் மஞ்சித் திவாகர் இயக்கியுள்ளார்.

இவ்விழாவில் பேசிய ஆர்.கே.சுரேஷ்,’’மலையாளத்தில் ஈகோ இல்லை. அங்கு குடும்பமாக வேலைப் பார்க்கிறார்கள். ஆனால் இங்கு தமிழ் சினிமாவில் அந்த சூழல் இல்லை. மம்முட்டியுடன் ‘மதுர ராஜா’ படத்தில் நடித்தபோது அங்கு சினிமா எவ்வளவு எளிமையாக இருக்கிறது என்பதைக் கண்கூடாகக் கண்டேன்.

ஆனால் தமிழ் சினிமா, விஷால் போன்ற ‘யூஸ் அண்ட் த்ரோ’ பார்ட்டிகளிடம் மாட்டி முழித்துக்கொண்டிருக்கிறது. நடிகர் சங்க தேர்தலில் விஷால் தவிர்த்து வேறு யார் நின்றாலும் அவர்களுக்கு எனது ஆதரவு உண்டு. விஷாலுக்கு எதிராக போட்டியாளரை நிறுத்துவோம். ஜே.கே.ரித்திஷின் கனவை நிறைவேற்றுவோம். விஷால் எல்லாரையும் பயன்படுத்திவிட்டு கழற்றிவிட்டுவிடுவார். அந்தப் பட்டியலில் நடிகை சரத் வரலட்சுமி,உதயா, ஜே.கே.ரித்திஷ் என்று ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்’என்றார் சுரேஷ்.