பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜிவி பிரகாஷ் – சைந்தவி பிரிவு குறித்தும், தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினி குறித்தும் பேசியுள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜிவி பிரகாஷ் – சைந்தவி பிரிவு குறித்தும், தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினி குறித்தும் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “ இன்று எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்கின்றனர். பணம் வந்த உடன் தலைகால் புரியாமல் நடந்து கொள்கின்றனர். எனது கருத்து என்னவெனில், பெண்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்பது தான் இங்கு விவாகரத்து நடப்பது காரணம். பெண்கள் இது தொடர்பாக என்னை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அண்மையில் ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து செய்து கொண்டதாக கேள்விப்பட்டேன். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சபலம் இல்லாமல் எந்த ஒரு ஆணும், பெண்ணும் இருக்க முடியாது.
ஜெயிலர் படத்திற்கு பின் தனது சம்பளத்தை 30% உயர்த்திய தமன்னா.. இத்தனை கோடியா?
ஆண்கள் தவறாக செல்லும் போது பெண்கள் அதற்கு ஒத்து சென்று சமாளித்து வாழ்கின்றனர். சில பெண்கள் கேள்வி கேட்கின்றனர். என்னை பொறுத்தவரை பெண்கள் கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது என்று நினைக்கிறேன். 60,70 வயதுக்கு மேல் உங்களுக்கு ஒரு துணை க்னடிப்பாக வேண்டும். எல்லோருமே இங்கு சிவகுமார் போல திடகாத்திரமாக வாழ முடியாது.
எனவே தங்கள் தவறை இருவரும் உணர்ந்து விட்டுக்கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை என்று நான் நினைக்கிறேன். ஒரு குடும்பத்தில் இருவருமே விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். அதிலும் பெண்கள் கொஞ்சம் அதிகமாக விட்டுக்கொடுக்க வேண்டும். கடவுள் இயல்பிலேயே பெண்களுக்கு விட்டுக்கொடுக்கும் குணத்தை அதிகமாக கொடுத்திருக்கிரார். பெண்கள் அனுசரித்து செல்ல வேண்டும் என்பது எனது கருத்து. இது தவறாக கூட இருக்கலாம். ஆனால் அப்படி செய்தால் முக்கால்வாசி பிரச்சனைகள் சரியாகிவிடும்.
தனுஷ் – ஐஷ்வர்யாவை பொறுத்தவரை தனுஷ் மீது அவரின் மகன்களுக்கு அதிக பாசம் இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதே நேரம் அம்மா ஐஸ்வர்யா மீது மகன்களுக்கு பெரிதாக பாசம் இல்லை என்பதையும் கேள்விப்பட்டிருக்கிறேன். சிறு வயதில் நீங்கள் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து இது அமைகிறது” என்று கூறினார்.
