- Home
- Gallery
- சொந்தமாக தனி விமானம்.. குவிந்து கிடக்கும் சொகுசு கார்கள்- ராஜ வாழ்க்கை வாழும் ஜூனியர் NTRன் சொத்து மதிப்பு இதோ
சொந்தமாக தனி விமானம்.. குவிந்து கிடக்கும் சொகுசு கார்கள்- ராஜ வாழ்க்கை வாழும் ஜூனியர் NTRன் சொத்து மதிப்பு இதோ
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Junior NTR
ஆந்திர திரையுலகில் ஜாம்பவான் நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என் டி ஆரின் பேரனான ஜூனியர் என்.டி.ஆர் தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் கொண்டிருக்கிறார். இவர் கடந்த 2001-ம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஸ்டூடண்ட் நம்பர் 1 திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
RRR hero Junior NTR
பின்னர் படிப்படியாக தெலுங்கில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த ஜூனியர் என்டிஆருக்கு ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு திரைக்கு வந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோவாக உருவெடுத்தார். ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரணின் நண்பனாக கொமரம் பீம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Devara Actor Junior NTR
ஆர்.ஆர்.ஆர் படத்தின் அதிரிபுதிரியான வெற்றியால் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படங்கள் பான் இந்தியா அளவில் உருவாகி வருகின்றன. அவர் கைவசம் தற்போது தேவரா திரைப்படம் உள்ளது. இப்படத்தை கொரட்டலா சிவா இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார்.
Telugu Actor Junior NTR
இதுதவிர கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ள ஜூனியர் என்டிஆர், இந்தியிலும் ஹிருத்திக் ரோஷன் உடன் இணைந்து வார் 2 திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் ஜூனியர் என்டிஆர்.
இதையும் படியுங்கள்... 30 ஆண்டுகளுக்கு பின் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிடும் முதல் இந்திய திரைப்படம் “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” !
Junior NTR Birthday
நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ.60 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். தற்போது தேவரா படத்தின் முதல் பாகத்தில் நடிக்க அவருக்கு ரூ.60 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் இந்தியில் அவர் நடிக்க உள்ள வார் 2 படத்துக்காக அவருக்கு ரூ.50 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாம்.
Junior NTR salary
நடிகர் ஜூனியர் என்டிஆர் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Junior NTR Net Worth
அதன்படி நடிகர் ஜூனியர் என்டிஆரின் சொத்து மதிப்பு ரூ.450 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. சினிமா மட்டுமின்றி விளம்பரங்களில் நடிப்பதன் மூலமும் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார் ஜூனியர் என்.டி.ஆர். அவருக்கு சொந்தமாக ஐதராபாத்தில் சொகுசு வீடும் உள்ளது. இதுதவிர சொந்தமாக பிரைவேட் ஜெட்டும் வைத்திருக்கிறார்.
Junior NTR Car Collection
கார் மீது அலாதி பிரியம் கொண்ட நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் எக்கச்சக்கமான சொகுசு கார்களையும் வாங்கி குவித்து வைத்துள்ளார். அவரிடம் லம்போகினி உருஸ், போர்ஸே 718 கேமேன், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.எஸ், ரேஞ்சு ரோவர், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், மெர்சிடிஸ் மே பேச் போன்ற சொகுசு கார்கள் உள்ளன.
இதையும் படியுங்கள்... இந்தியன் 2 மட்டுமில்ல இந்தியன் 3 ரிலீஸ் தேதியும் வந்தாச்சு... அஜித் படத்துடன் ஒத்தைக்கு ஒத்தையாக மோத முடிவு