கொடுத்த வாக்கை காப்பாற்றாத  கரைச்சல்  பேர்வழி என தயாரிப்பாளர்கள் மத்தியில் பெயரெடுத்தவர் நடிகர் சிம்பு, படத்தை நடித்து  தர்றேன்னு  ஒரு ஆண்டுக்கு முன்பாக ஒப்புக்கொண்டு இதோ 
நடிக்கிறேன்,அதோ நடிக்கிறேன்னு,  தயாரிப்பாளருக்கு தண்ணி காட்டிய சிம்புவால்  டர்ஆன தயாரிப்பாளர் போதும்டா சாமி உன் சவகாசம் என கும்பிடி போட்டு ஒட்டம் பிடித்துள்ளார்.

மிக மிக அவசரம் , அத்தியாயம், கங்காரு உள்ளிட்ட படங்களின் தயாரித்துள்ளவர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியின் போது சுரேஷ் காமாட்சியை சந்தித்த சிம்பு, தன்னை 
வைத்து ஏன் ஒரு படம் தயாரிக்க கூடாதா... என்று கேட்டுள்ளார், சிம்பு  வாய் திறந்து கேட்கவே மறுப்பு ஏதும் சொல்லாமல் சரி என ஒப்புக்கொண்டுள்ளார்  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பின்னர் 
தடபுடலாக சிம்புவை கதாநாயகனாகவும் ,வெங்கட் பிரபுவை இயக்குனராகவும்  வைத்து  மாநாடு என்ற படத்தை தயாரிப்பதற்கான ஒப்பந்தமும் கடந்த ஒராண்டுக்கு முன்பு  கையெழுத்தாகி உள்ளது, 

தனக்கு சிறு சிறு வேலைகள் இருக்கிறது அவைகளை எல்லாம் முடுத்துவிட்டு வந்து விடுகிறேன், படத்திற்கான வேலைகளை கவனியுங்கள் என்று கூறிவிட்டு எஸ்கேப் ஆனவர்தான்  சிம்பு. அத்துடன் 
அந்த பக்கமே தலைகாட்டவில்லை என்று கூறுகிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.  ஒப்பந்தம் போட்டு ஒராண்டாக இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று தயாரிப்பாளருக்கு சிம்பு தண்ணி 
காட்ட , அதில் கடுப்பான தயாரிப்பாளர் மாநாடு படத்திலிருந்தே சிம்புவை ஒட்டுமொத்தமாக  துக்கியடித்துள்ளார். அது தொடர்பாக அறிக்கை ஒன்றை சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார்.

வணக்கம்... நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. 

மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். 

தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை 
தூண்டி... துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறேன் என்று 
நம்புகிறவன் நான். 

ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை. 

அதனால் சிம்பு "நடிக்க இருந்த" மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. 
சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் 
மனமார்ந்த நன்றிகள். 

வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!!

-

இப்படிப்பு 
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,  என்று தன்னுடைய அறிக்கையை முடித்துள்ளார்.  சிம்புவை வைத்துத்தான் படம் தயாரிக்க முடியவில்லையே தவிர, அதே இயக்குனர் வெங்கட் பிரபுவை வைத்து 
மாநாடு படத்தை நிச்சயம் தயாரிப்பேன் என  சிம்புவுக்கு சவால் விடுத்துள்ளார் , இத்தனை நாட்களாக சிம்பு தான் ஒத்துகொண்ட படங்களை நடித்து கொடுக்காமல் படங்களில் இருந்து விலகி வந்த 
நிலையில்...இப்போது முதல் முறையாக தயாரிப்பாளர் இனி நீ வேண்டவே வேண்டாம் ஆளைவிடு சாமி என சிம்புவை படத்திலிருந்த் தூக்கி அடித்திருப்பது சிம்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை 
ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமானிடம்... அண்ணா உங்கள் கதைக்கு ஹூரோவாக நான் படம் நடித்து தருகிறேன் என்று சிம்பு கமிட்டாகி 
உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...